ஓசூரில் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே.

 
தமிழகம்

தொகுதி மறுவரையறையை ஸ்டாலின் எதிர்த்தது ஏன்? - கார்கே விளக்கம்

செய்திப்பிரிவு

தொகுதி மறு​வரையறையை ஸ்டா​லின் எதிர்த்​த​போது நாடு எச்​சரிக்கை அடைந்​தது. நாடு காப்​பாற்​றப்​படவே ஸ்டா​லின் இதைச் செய்​தார் என்று காங்​கிரஸ் தலை​வர் மல்​லி​கார்​ஜுன கார்கே தெரி​வித்​தார்.

ஓசூரில் நடந்த திமுக கூட்​டணி தேர்​தல் பிரச்​சா​ரக் கூட்​டத்​தில் காங்​கிரஸ் தலை​வர் மல்​லி​கார்​ஜுன கார்கே கன்​னடத்​தில் பேசி​னார். அவர் பேசி​ய​தாவது: முதல்​வர் மு.க. ஸ்டா​லின் தன்​மானத்​திற்​காகப் போராடக் கூடிய​வர். காங்​கிரஸ், திமுக மகளிருக்கு எதி​ரான கட்​சிகள் இல்​லை, சமூகநீ​தி, ஜனநாயகத்​தைப் பின்​பற்​றக் கூடிய​வர்​கள் நாங்​கள். தொகுதி மறு​வரையறையைத்​தான் நாங்​கள் எதிர்த்​தோம், மகளிர் இடஒதுக்​கீட்டை அல்ல.

இவர்​களின் நோக்​கம் தமிழகம், மேற்கு வங்​கத்​தில் எதிர்க்​கட்​சிகளை வெல்ல பெண்​களுக்​கான இடஒதுக்​கீட்டை கொண்டு வந்​தனர். மணிப்​பூரில் நடந்த கலவரங்​களின்​போது எங்கே சென்​றீர்​கள்? விமானத்​தில் சுற்றி வந்​தீர்​கள். பிரதமர் மோடி நாட்டை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்​பவர் அல்ல.

ராகுல் காந்தி குமரி முதல் காஷ்மீர் வரை நடைபயணம் மேற்​கொண்​டார். ஆனால், மோடி தியானம், பூஜை உள்​ளிட்​ட​வற்றை செய்து வரு​கிறார். இவற்​றால் பலன் இல்​லை. ஸ்டா​லின் தொகுதி மறு​வரையறையை எதிர்த்​த​போது நாடு எச்​சரிக்கை அடைந்​தது. நாடு காப்​பாற்​றப்பட ஸ்டா​லின் இதைச் செய்​தார். வேறு எந்த காரண​மும் இல்​லை.

நாடு இன்று வளர்ந்​துள்​ளது என்​றால் தென்​னிந்​தி​யா​வின் மூல​மாகவே இருக்க முடி​யும் என்​பதை மறந்​து​விடக்​கூ​டாது. வாக்​குறு​தி​கள் அளிப்​பது மட்​டுமல்ல; அவற்றை நிறைவேற்​றி​யும் காட்​டி​யுள்​ளது திமுக. அனை​வரும் ஒற்​றுமை​யுடன் திமுக, காங்​கிரஸ், கம்​யூனிஸ்ட் உள்​ளிட்ட கட்​சிகள் கொண்ட கூட்​ட​ணி​யாக ஸ்டா​லின் தலை​மை​யில் போராடி வரு​கிறோம்.

ஸ்டா​லின் தனி ஒரு​வ​ராக போராட​வில்​லை. அவருக்​குப் பின்​னால் காங்​கிரஸ் உள்​ளிட்ட பல்​வேறு இயக்​கங்​கள் உள்ளன என்​பதை மறுக்க முடி​யாது. ஸ்டா​லினுக்கு நாடே ஆதரவு அளித்து வரு​கிறது. 12 ஆண்​டு​களில் மோடிக்கு இது முதல் தோல்​வி; இனி அனைத்​தி​லும்​ தோல்​வியை வழங்​க வேண்​டும்​. இவ்​வாறு அவர்​ பேசி​னார்​.

SCROLL FOR NEXT