மகளிர் இடஒதுக்கீட்டை தடுப்பதாக பாஜக அபாண்டப் பழி: முதல்வர் ஸ்டாலின் குற்றச்சாட்டு

மகளிர் இடஒதுக்கீட்டை தடுப்பதாக பாஜக அபாண்டப் பழி: முதல்வர் ஸ்டாலின் குற்றச்சாட்டு
Updated on
2 min read

மகளிர் இடஒதுக்​கீட்டை தடுப்​ப​தாக திமுக – காங்​கிரஸ் மீது பாஜக​வினர் அபாண்​ட​மாக பழி சுமத்​துகின்​றனர். ஏப்​ரல் 17-ம் தேதி​யோடு என்​டிஏ கூட்​டணி காலி​யாகி​விட்​டது என ஓசூர் தேர்​தல் பிரச்​சா​ரத்​தில் திமுக தலை​வரும், முதல்​வரு​மான மு.க.ஸ்​டா​லின் பேசி​னார்.

கிருஷ்ணகிரி மாவட்​டம் ஓசூர் அந்​தி​வாடி​யில் திமுக கூட்​டணி வேட்​பாளர்​களை ஆதரித்து முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் மற்​றும் அகில இந்​திய காங்​கிரஸ் கட்​சித் தலை​வர் மல்​லி​கார்​ஜுன கார்கே ஆகியோர் பிரச்​சா​ரம் மேற்​கொண்​டனர். இதில், முதல்​வர் ஸ்டா​லின் பேசி​ய​தாவது: கடந்த இரு தினங்​களுக்கு முன்​னர் தமிழகத்​தின் உரிமையை திமுக​வால் காப்​பாற்ற முடி​யும் என்​பதை நிரூபித்​து​விட்டு கெத்​தாக வந்து இங்கு நிற்​கிறேன். ராகுல் காந்தி தமிழகத்​திற்கு பிரச்​சா​ரம் செய்ய வந்​தார்.

அப்​போது அவர் பேசும்​போது, “மோடி​யால் ஸ்டா​லினை கண்ட்​ரோல் செய்ய முடி​யாது, அடிமை அதி​முக ஆட்​சியை தமிழகத்​தில் நிறுவ பார்க்​கிறார்” என பேசி​னார். டெல்டா மாவட்​டத்​துக்கு ராகுல் வந்​திருந்​தார். தென்​கோடி​யில் பிரச்​சா​ரத்​தில் இருந்​தார். நான் சென்​னை​யில் பிரச்​சா​ரம் செய்​தேன். ராகுல்​காந்​தி​யும் நானும் சுற்​றிச் சுற்றி பிரச்​சா​ரம் செய்து வெற்​றியை உறுப்​படுத்தி வரு​கிறோம்.

தமிழகத்​தில் 40 ஆயிரம் தொழிற்சாலைகள் உள்​ளன. ஆனால் மத்​திய அரசு தமிழகத்​தின் வளர்ச்​சித் திட்​டப் பணி​களை தடுக்​கிறது. இதனை தட்​டிக்​கேட்க முடி​யாமல் பழனி​சாமி உள்​ளார். வாக்கு கேட்டு வரும் பழனி​சாமி​யிடம் கேள்வி கேளுங்​கள். காரில் நான் கிரிக்​டெ் பார்த்​தது தவறு என பழனி​சாமி கூறுகிறார். முதல்​வர் கிரிக்​கெட் பார்ப்​பது தவறு இல்​லை. ஆனால், தூத்​துக்​குடி​யில் துப்​பாக்​கிச் சூட்டை டிவி​யில் பார்த்து தான் தெரிந்து கொண்​டேன் என கூறி​னாரே அது தான் தவறு. தேர்​தல் பரப்​புரை கூட்​டத்​தில் பேச வேண்​டிய அனைத்​தும் அரசு நிகழ்​வில் மோடி பேசி​யது, தேர்​தல் விதி​முறை மீறிய​தாக உள்​ளது.

மகளிர் இடஒதுக்​கீட்டை தடுப்​ப​தாக திமுக- காங்​கிரஸ் மீது பாஜக​வினர் அபாண்​ட​மாக பழி சுமத்​துகின்​றனர். பிரதமர் மோடி அவர்​களே, ஏப்​ரல் 17-ம் தேதி​யோடு என்​டிஏ கூட்​டணி காலி​யாகி​விட்​டது. தொகுதி மறு​வரையறையை நாடாளு​மன்​றத்​தில் நிலைகுலைய வைத்​துள்​ளோம். திரா​விட மாடல் திட்​டங்​கள் மக்​கள் மத்​தி​யில் நன்கு ‘ரீச்​’​சாகி​யுள்​ளது.

குழந்​தைகள் முதல் பெரிய​வர் வரை திட்​டம் சென்​றுள்​ளது. பிறந்த குழந்​தைகளுக்கு ஊட்​டச்​சத்து திட்​டம், காலை உணவுத் திட்​டம், அரசுப் பள்​ளி​களில் ஸ்மார்ட் வகுப்​பறை திட்​டம், பள்​ளிக் கல்வி முடித்த பின்​னர் நான் முதல்​வன் திட்​டம், புது​மைப் பெண் திட்​டம், கல்​லூரி மாணவர்​களுக்கு 10 லட்​சம் மடிக்​கணினி வழங்கி உள்​ளோம். மீண்​டும் திமுக ஆட்சி அமைந்​தால், மேலும், 35 லட்​சம் பேருக்கு மடிக்​கணினி வழங்க உள்​ளோம்.

எனது சக்​தியை மீறி பிரச்​சா​ரம் செய்​கிறேன். 200 தொகு​தி​களில் வெற்​றி​பெற வேண்​டும். திமுக தவிர மற்​றவர்​களுக்கு போடு​கிற வாக்கு பாஜக​விற்கு போடு​கிற வாக்​காகும். தமிழகத்​தில் தி​முக​விற்​கும் என்​டிஏ கூட்​ட​ணிக்​கும் ஜனநாயகப் போர் நடக்​கிறது. நாம்​ அனை​வரும்​ ஒன்​றிணைந்​து தாய்​ தமிழ்​ நாட்​டை காப்​பாற்​ற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

மகளிர் இடஒதுக்கீட்டை தடுப்பதாக பாஜக அபாண்டப் பழி: முதல்வர் ஸ்டாலின் குற்றச்சாட்டு
தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் நாளை மாலையுடன் நிறைவு: 23-ம் தேதி வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகள் தீவிரம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in