தமிழகம்

தேர்தலில் நிற்காத மநீம பிரச்சார பாடல் வெளியீடு

செய்திப்பிரிவு

சட்​டப்​பேரவை தேர்​தலில் திமுக கூட்​ட​ணிக்கு ஆதர​வாக மக்​கள் நீதி மய்​யம் தலை​வர் கமல்​ஹாசன் சொந்த குரலில் பாடி பிரச்​சார பாடலை வெளி​யிட்​டுள்​ளார். திமுக தலை​மையி​லான மதச்​சார்​பற்ற முற்​போக்​குக் கூட்​ட​ணி​யில் கமல்​ஹாசனின் மக்​கள் நீதி மய்​யம் அங்​கம் வகித்து வரு​கிறது. சட்​டப்​பேரவை தேர்​தலில் மநீம போட்​டி​யிட​வில்​லை. ஆனாலும் திமுக கூட்​டணி கட்சி வேட்​பாளர்​களை ஆதரித்து பல்​வேறு தொகு​தி​களில் கமல்​ஹாசன் பிரச்​சா​ரம் செய்து வரு​கிறார்.

இந்​நிலை​யில், திமுக கூட்​ட​ணிக்கு ஆதர​வாக “தலை​வன் இருக்​கிறான்” என்ற பிரச்​சார பாடலை கமல்​ஹாசன் வெளி​யிட்​டிருக்​கிறார். ‘வெல்​லும் படை இது’ என தொடங்​கும் இப்​பாடலை அவரே பாடி​யுள்​ளார். திமுக கூட்​ட​ணியை ஆதரித்து கமல்​ஹாசன் வெளி​யிட்​டுள்ள பிரச்​சார பாடல் தற்​போது சமூக வலை​தளங்​களில் பகிரப்​பட்​டு வருகிறது.

SCROLL FOR NEXT