தமிழகம்

பிரச்சாரம் முடிய 10 நாட்களே உள்ள நிலையில் தேர்தல் அறிக்கை வெளியிடாத புதுச்சேரி பிரதான கட்சிகள்

வாக்குறுதிகளை அறிய மக்கள் ஆர்வம்

செய்திப்பிரிவு

புதுச்​சேரி: பெரும்​பாலும் தமிழகத்​துடன் இணைத்தே புதுச்​சேரிக்​கான சட்​டப்​பேரவை தேர்​தல் நடை​பெறும். இந்த முறை வழக்​கத்​துக்கு மாறாக ஏப். 9-ம் தேதி முன்கூட்டியே நடை​பெறுகிறது. அதன்படி பிரச்​சா​ரம் ஏப். 7-ம் தேதி​யுடன் முடிகிறது.

தமிழகத்​தைக் காட்​டிலும் இரு வாரங்​கள் முன்​னரே நடப்​ப​தால், தொடக்​கம் முதலே கூட்​டணி அமைப்​ப​தில் இருந்​து, வேட்பு மனுத்​தாக்​கல், பிரச்​சா​ரம் என பலவற்​றி​லும் அனைத்​துக் கட்சி வேட்​பாளர்​களும் திடீர் நெருக்​கடியை எதிர் கொண்​டனர்.

தேர்​தல் ஆணை​யத்​தின்கால அவகாசம் இல்​லாத இந்த அறி​விப்​பால், அனைத்து அரசி​யல் கட்​சிகளும் தேர்​தல் அறிக்​கையை இது​வரை வெளி​வி​டா​மலேயே பிரச்​சார களத்​துக்கு வந்து விட்​டனர்.

          

தேர்​தலுக்கு இன்னும் 10 நாட்​களே உள்ள நிலை​யில், முக்​கிய கட்​சிகள் தேர்​தல் வாக்​குறு​தி​களை எப்​போது வெளி​யிடும் என்​பது தெரிய​வில்​லை. இதுதொடர்​பாக மக்​கள் வாழ்​வுரிமை இயக்​கச் செய​லா​ளர்ஜெகன்​நாதன் கூறிய​தாவது: தமிழக சட்​டப்​பேரவை தேர்​தலுக்​கான அறி​விப்பை வெளி​யிட்டு, உரிய கால அவகாசத்தை தேர்​தல் ஆணை​யம் அளித்​திருந்​தது. இதனால் தமிழக அரசி​யல் கட்​சிகளுக்கு தேர்​தல் அறிக்​கையை வெளி​யிட கால அவகாசம் கிடைத்​துள்ளது.

ஒரே நேரத்​தில் தேர்​தல் தேதி அறிவிக்​கப்​பட்​டு, அதில் புதுச்​சேரிக்கு மட்​டும் இரு வாரங்​களுக்கு முன்பே நடத்து​வது நியா​யம் இல்​லை. இதனால் அரசி​யல் கட்சிகளும் வேட்​பாளர்​களும் தேர்​தல் வாக்​குறுதி எதை​யும் மக்​களுக்கு அளிக்​காமல் தேர்​தலை சந்​திக்​கின்​றனர். இது ஜனநாயக மாண்​பு​களுக்கு உகந்த செயல் ஆகாது. இந்த நெருக்​கடியைத் தாண்​டி,புதுச்சேரியின் அனைத்து முக்​கிய கட்​சிகளும் உடனே தங்​களது வாக்​குறுதிகள் உள்ளடக்கிய தேர்தல் அறிக்​கைகளை வெளி​யிட வேண்​டும். இவ்​வாறு தெரிவித்​துள்​ளார்​.

SCROLL FOR NEXT