காஞ்சிபுரம் நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்களிடம் ஆதரவு திரட்டிய திமுக வேட்பாளர் நித்யா.

 
தமிழகம்

காஞ்சிபுரம் தொகுதியில் சுற்றிச் சுழன்று களமாடும் பிரதான கட்சிகள்

இரா.ஜெயபிரகாஷ்

காஞ்சிபுரம்: ​காஞ்சிபுரம் சட்​டப்​பேர​வைத் தொகு​தி​யில், கொளுத்​தும் வெயிலை​யும் பொருட்​படுத்​தாமல் பிர​தான கட்சிகளின் வேட்​பாளர்​கள் சுற்​றிச் சுழன்று வாக்கு சேகரிப்​பில் ஈடு​பட்டு வரு​கின்​றனர்.

இத்​தொகு​தி​யில் தாக்​கல் செய்​யப்​பட்ட வேட்​புமனுக்​களில் 17 பேரின் மனுக்​கள் ஏற்​கப்​பட்​டுள்​ளன. திமுக சார்​பில் நித்​யா, அதி​முக சார்​பில் மாவட்​டச் செயலர் வி.சோமசுந்​தரம், நாம் தமிழர் கட்சி சார்​பில் வெற்​றிச் செல்​வி, தவெக சார்​பில் ரஞ்​சித்​ கு​மார் உள்பட சுயேட்​சைகள், சில அமைப்​பு​களைச் சார்ந்​தோர் போட்​டி​யிடு​கின்​றனர்.

திமுக - நலத் திட்​டங்​கள் முன்​வைப்பு

திமுக சார்​பில் போட்​டி​யிடும் நித்​யா, திமுக அரசின் மக்​கள் நலத் திட்​டங்​களை​யும், கடந்த கால சாதனை​களை​யும் முன்​வைத்து வாக்கு சேகரித்து வரு​கிறார்.

          

மகளிர் உரிமைத் தொகை உள்​ளிட்ட திட்​டங்​கள் மக்​களைச் சென்​றடைந்​ததை சுட்​டிக்​காட்​டி​யும், காஞ்​சிபுரம் புதிய பேருந்து நிலை​யம், நெச​வாளர் நலன் மற்​றும் தொகுதி வளர்ச்​சிக்​கான புதிய வாக்​குறு​தி​களை​யும் அளித்து வரு​கிறார்.

காஞ்சிபுரம் பகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட அதிமுக வேட்பாளர் வி.சோமசுந்தரம்.

அதி​முக - தேர்​தல் வாக்​குறு​தி​களை சுட்​டிக்​காட்​டல்

அதி​முக வேட்​பாள​ரும் மூத்த அரசி​யல்​வா​தி​யு​மான வி.சோமசுந்​தரம், அதி​முக ஆட்​சிக் காலத்​தில் காஞ்​சிபுரத்​தில் நிறைவேற்​றப்​பட்ட திட்​டங்​களை மக்​களிடம் நினை​வூட்டி வரு​கிறார்.

தற்​போதைய அரசின் குறை​பாடு​களைச் சுட்​டிக்​காட்​டி​யும், அதி​முக​வின் தேர்​தல் வாக்​குறு​தி​களை விளக்​கி​யும் அவர் தீவிர வாக்கு சேகரிப்​பில் ஈடு​பட்டு வரு​கின்​றனர்.

காஞ்சிபுரம் அருகே கிராமப் பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட நாதக வேட்பாளர் வெற்றிச்செல்வி.

நாதக - சுற்​றுச்​சூழல் பாது​காப்பு முன்​வைப்பு

நாம் தமிழர் கட்சி வேட்​பாளர் வெற்​றிச் செல்​வி, தற்​சார்பு விவ​சா​யம், நீர்நிலைகளைப் பாதுகாத்தல், சுற்​றுச்​சூழல் பாது​காப்பை முன்​வைத்து பிரச்சாரம் செய்து வரு​கிறார். நேரடி​யாக மக்​களைச் சந்​தித்து எளிய முறை​யில் வாக்கு சேகரிப்​ப​தில் ஆர்​வம் காட்டி வரு​கிறார்.

தவெக - மாற்​றத்​துக்​கான வாய்ப்பு கோரிக்கை

தவெக வேட்​பாளர் ரஞ்​சித் குமார், முக்​கிய பிர​முகர்​களை சந்​தித்து ஆதரவு திரட்டி வரு​கிறார். புதிய அரசி​யல் மாற்​றத்தை விரும்​புவோரின் ஆதர​வைத் திரட்​டும் நோக்​கில், இளைஞர்​களை​யும் பெண்​களை​யும் கவரும் வகை​யில் நவீன யுக்​தி​களு​டன் கூடிய பிரச்​சா​ரத்தை முன்​னெடுத்து வரும் இவர், மாற்​றத்​துக்​கான ஒரு வாய்ப்பை வழங்​கக் கோரி வாக்கு சேகரித்து வரு​கிறார்.

முக்கிய பிரமுகர்களைச் சந்தித்து ஆதரவு திரட்டிய தவெக வேட்பாளர் ரஞ்சித் குமார்.

காஞ்​சிபுரம் மாநகரம் முதல் ஊரகப் பகு​தி​கள் வரை அனைத்து இடங்​களி​லும் வேட்​பாளர்​கள் திறந்​தவெளி வாக​னங்​களி​லும், வீடு வீடாக​வும் சென்று வாக்கு சேகரிப்​ப​தால் ஈடுபட்டுள்ளதால், தொகுதி முழு​வதும் திரு​விழாக்​கோலம் பூண்​டுள்​ளது.

SCROLL FOR NEXT