சென்னை: சென்னை கடற்கரை- தாம்பரம் இடையே ரயில்வே பராமரிப்பு பணி நடைபெறுவதால், இந்த மார்க்கத்தில் இன்றும் (5-ம் தேதி), வரும் 12-ம் தேதியும் 41 ரயில் சேவைகள் ரத்து செய்யப்படுகின்றன.
அதன்படி, சென்னை கடற்கரை- தாம்பரத்துக்கு காலை 10.30, 11, 11.15, 11.30, நண்பகல் 12, 12.30, மதியம் 1.15, 1.30, 2, 2.30, 3.15, 3.45 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகின்றன. கடற்கரை- செங்கல்பட்டுக்கு காலை 10.45, 11.45, நண் பகல் 12.15, 12.45, மதியம் 2.15, 2.45 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகின்றன.
இது தவிர, சென்னை கடற்கரையில் இருந்து அரக்கோணத்துக்கு மதியம் 1 மணி, திருமால்பூருக்கு மதியம் 3 மணிக்கு இயக்கப்படும் ரயில் சேவையும் ரத்து செய்யப்படுகின்றன. அதேபோல, தாம்பரம்- சென்னை கடற்கரைக்கு காலை 10.45, 11, 11.30, நண்பகல் 12.15, 12.30, மதியம் 1.30, 1.45, 2.15, 2.25, 2.30, 3.30 மணிக்கு இயக்கப்படும் ரயில்கள் ரத்து செய்யப்படுகின்றன.
செங்கல்பட்டு - கடற்கரைக்கு காலை 9.30, 10.40, 11,11.40, நண்பகல் 12.05, 1, 1.50, 2.25 மணிக்கு இயக்கப்படும் ரயில்கள் ரத்து செய்யப்படுகின்றன. திருமால்பூர் - கடற்கரைக்கு பகல் 11.05 மணி, காஞ்சிபுரம் - கடற்கரைக்கு காலை 9.30 மணிக்கு இயக்கப்படும் ரயிலும் ரத்து செய்யப்படுகின்றன. இவ்வாறு மொத்தம் 41 ரயில் சேவைகள் ரத்து செய்யப்படுகின்றன.
மேற்கண்ட நாட்களில் பயணிகள் வசதிக்காக, தாம்பரம்- செங்கல்பட்டு இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.