ஆர்த்தி, அபினேஷ்

 
தமிழகம்

பள்ளிக்கரணை: டாக்டர் வீட்டில் 10 பவுன் திருட்டு - பணிப்பெண், காதலன் கைது

செய்திப்பிரிவு

பள்ளிக்கரணை: கோவிலம்​பாக்​கம், பூபதி நகரில் உள்ள அடுக்​கு​மாடிக் குடி​யிருப்​பில் வசிப்பவர் டாக்​டர் கார்த்​திக் (35). இவரது வீட்​டிலிருந்த சூட்​கேஸ், தங்க நகைகள், ரொக்​கப்பணம், ஆடைகள் காணா​மல் போனது தெரிந்தது.

இதுகுறித்து கார்த்​திக் அளித்த புகாரின்​பேரில், பள்ளிக்கரணை போலீ​ஸார் தனிப்​படை அமைத்து விசா​ரணை நடத்​தினர்.

குடி​யிருப்​பின் கண்​காணிப்பு கேமரா பதிவு​களை ஆய்வு செய்​த​போது, வீட்​டில் பணிப்​பெண்​ணாக வேலை செய்யும் மயி​லாடு​துறையைச் சேர்ந்த ஆர்த்தி (19), சூட்​கேஸ் மற்​றும் பைகளை எடுத்​துச் சென்​றது தெரிய​வந்​தது.

ஆர்த்​தி​யைக் கைதுசெய்து விசா​ரித்​த​தில், அவரது காதலன் அபினேஷுடன் (22) சேர்ந்து திருட்​டில் ஈடு​பட்​டது தெரிந்ததால் அபினேஷை​யும் போலீ​ஸார் கைது செய்​தனர்.

இரு​வரிட​மிருந்​தும் 10 பவுன் நகைகள், ரூ.30 ஆயிரம், ஆடைகள் மீட்​கப்​பட்​டன. இரு​வரும் நீதி​மன்​றத்​தில்​ ஆஜர்​படுத்​தப்​பட்​டு சிறை​யில்​ அடைக்​கப்​பட்​டனர்​.

SCROLL FOR NEXT