தமிழகம்

கோவை ஈஷா யோகா மையத்தில் பிப். 15-ல் மகா சிவராத்திரி விழா கொண்டாட்டம்

பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்பு

செய்திப்பிரிவு

கோவை: ஈஷா யோகா மையத்​தில் வரும் 15-ம் தேதி நடை​பெற உள்ள மகா சிவராத்திரி விழா​வில், மத்​திய பாது​காப்​புத் துறை அமைச்​சர் ராஜ்​நாத்​சிங் பங்​கேற்​கிறார்.

இதுகுறித்து தென் கைலாய பக்தி பேர​வையைச் சேர்ந்த தன்​னார்​வலர் ரவீந்​திரன் கோவை​யில் செய்​தி​யாளர்​களிடம் நேற்று கூறிய​தாவது: ஈஷா​வில் 32-வது மகா சிவராத்திரி கொண்​டாட்​டங்​கள் வரும் 15-ம் தேதி பிரம்​மாண்​ட​மான அளவில் நடை​பெறுகின்​றன. சிறப்பு விருந்​தின​ராக பாது​காப்​புத் துறை அமைச்​சர் ராஜ்​நாத் சிங் கலந்து கொள்​கிறார்.

          

மேலும், பல்​வேறு முக்​கியப் பிர​முகர்​கள் மற்​றும் லட்​சக்​கணக்​கான பொது​மக்​கள் கலந்து கொள்​கின்​றனர். அன்று மாலை 6 மணிக்​குத் தொடங்​கி, மறு​நாள் காலை 6 மணி வரை விழா கொண்​டாடப்பட உள்​ளது.

ஆதி​யோகி சிலை முன்​புறம், ஈஷா நிறு​வனர் சத்​குரு​வுடன் நடை​பெறும் இவ்​விழா​வில் சக்​தி​வாய்ந்த தியானங்​கள், மந்​திர உச்​சாடனை​கள், யோகேஷ்வர லிங்க மஹா அபிஷேகம் மற்​றும் சிறந்த கலைஞர்​களின் இசை நிகழ்ச்​சிகள் உள்​ளிட்​டவை நடை​பெற உள்​ளது.

இரவு முழு​வதும் தியானலிங்​கம் மற்​றும் லிங்க பைரவி வளாகங்​கள் பொது மக்​களின் தரிசனத்​திற்கு திறந்​திருக்​கும். தியான லிங்​கத்​துக்கு பொது​மக்​கள் அபிஷேகம் செய்​ய​லாம்.

நடப்​பாண்டு முதல்​முறை​யாக ஆதி​யோகி முன்பு பிர​திஷ்டை செய்​யப்​பட்​டுள்ள யோகேஷ்வர லிங்​கத்​துக்கு ‘மகா அபிஷேகம்’ எனும் ஆன்​மிக செயல்​முறையை சத்​குரு அர்ப்​பணிக்க உள்​ளார். மேலும், விழா​வின் முக்​கிய அம்​ச​மாக நள்​ளிரவு சந்​தியா மற்​றும் பிரம்​ம​முகூர்த்த நேரங்​களில்

சக்​தி​மிகுந்த தியானங்​கள் சத்​குரு​வால் வழிநடத்​தப்பட உள்​ளன. மேலும், பாரதப் பாரம்​பரிய மற்​றும் நாட்​டுப்​புறக் கலை வடிவங்​களை வெளிப்​படுத்​தும் வகை​யில் இரவு முழு​வதும் இசை மற்​றும் நடன நிகழ்ச்​சிகள் நடை​பெற உள்​ளன.

SCROLL FOR NEXT