தமிழகம்

வெளி மாநிலங்களுக்கு கனிமங்கள் கொண்டு செல்ல தடை விதிப்பு: உயர் நீதிமன்றம் புதிய உத்தரவு

செய்திப்பிரிவு

மதுரை: தமிழகத்​தில் இருந்து பிற மாநிலங்​களுக்​குக் கனிமங்​களைக் கொண்டு செல்​வதற்​கான தடையை நீக்​கக் கோரிய வழக்கை தலைமை நீதிபதி அமர்​வுக்கு மாற்றி உயர் நீதி​மன்ற மதுரைக் கிளை உத்​தர​விட்​டது.

குமரி மாவட்​டம் லிபின் பொன்​னுசு​வாமி லீலா, தேனி மாவட்​டம் அருண் அரவிந்த் ஆகியோர் உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வில் தாக்​கல் செய்த மனுவில், பிற மாநிலங்​களுக்கு கருங்​கல், ஜல்​லி, எம்​-​சாண்ட் உள்​ளிட்ட கனிமங்​கள் கொண்டு செல்ல 3 மாதங்​களுக்​குத் தடை விதித்து கனிம வளத்​துறை இயக்​குநர் பிறப்​பித்த உத்​தரவை ரத்து செய்து வேண்​டும் என கோரியிருந்​தனர்.

இந்த மனுக்​கள் நீதிப​தி​கள் தண்​ட​பாணி,திலீப் குமார் அமர்​வில் நேற்று விசா​ரணைக்குவந்​தன. அரசுத் தரப்​பில் சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் தலைமை நீதிபதி அமர்​வில் இது​போன்ற வழக்கு நிலு​வை​யில் உள்​ளது எனக் கூறப்​பட்​டது. மனு​தா​ரர் தரப்​பில், இந்தவழக்கு மதுரை அமர்​விலேயே விசா​ரித்து உத்​தரவு பிறப்​பிக்க கோரப்​பட்​டது.

இதையடுத்து நீதிப​தி​கள், இந்த மனுக்​களை தலைமை நீதிப​திக்கு பதிவுத்​துறை அனுப்ப வேண்​டும். மனுக்​களை எங்கு விசா​ரிக்க வேண்​டும் என்​பதை தலைமை நீதிபதி முடி​வெடுப்​பார் என உத்​தர​விட்​டனர்.

SCROLL FOR NEXT