தமிழகம்

தமிழக டிஜிபி மாற்றத்தில் மத்திய அரசின் தலையீடு: மு.வீரபாண்டியன் குற்றச்சாட்டு

செய்திப்பிரிவு

சென்னை: மத்​திய அரசின் தலை​யீட்​டால் தமிழக டிஜிபி மாற்​றம் செய்​யப்​பட்​டுள்​ள​தாக இந்​திய கம்​யூனிஸ்ட் கட்​சி​யின் மாநிலச் செய​லா​ளர் மு.வீர​பாண்​டியன் குற்​றம்​சாட்​டி​யுள்​ளார்.

இதுகுறித்து அவர் வெளி​யிட்ட அறிக்​கை​: தமிழகத்​தில் சட்​டப்​பேரவை தேர்​தல் நெருங்​கிவரும் வேளை​யில், மத்​திய அரசின் அழுத்​தத்​தால் டிஜிபி வெங்​கட்​ராமன், தாம்​பரம், மதுரை காவல் ஆணை​யர்​கள், 2 மாவட்ட ஆட்​சி​யர்​களை தேர்​தல் ஆணை​யம் இடமாற்​றம் செய்​துள்​ளது.

          

இவர்​களு​டன் மேலும் பல உயர் அதி​காரி​களை இடமாற்​றம் செய்ய தேர்​தல் ஆணை​யம் முயற்​சிப்​ப​தாக​வும் செய்​தி​கள் வெளி​யாகி​யுள்​ளன. தேர்​தல் ஆணை​யம் மத்​திய பாஜக அரசின் கைப்​பாவை​யாக செயல்​படு​வது கண்​டனத்​துக்​குரியது.

அரசி​யல் சட்​டப்​படி நடுநிலை​யோடு செயல்பட வேண்​டிய தேர்​தல் ஆணை​யம், பாஜக​வுக்கு ஆதர​வாக செயல்​படு​வது நாடாளு​மன்ற ஜனநாயகத்​துக்​கும், நேர்​மை​யாக, நடுநிலை​யாக தேர்​தலை நடத்​து​வதற்​கும் எதி​ரானது.

மத்​திய பாஜக அரசின் வற்​புறுத்​தலால் மேற்​கொள்​ளும் இத்​தகைய பாரபட்ச போக்​கு​களை தேர்​தல் ஆணை​யம் உடனடி​யாக கைவிட வேண்​டும்.

ஆளுநரின் அதி​காரங்​கள்

ஆயுள் தண்​டனைக் கைதி​களை முன்​கூட்​டியே விடு​தலை செய்​வது, தண்​டனைக் குறைப்பு ஆகிய​வற்​றில் ஆளுநர்​களின் தலை​யீடு பற்​றிய உயர் நீதி​மன்​றத் தீர்ப்பு வரவேற்​கத்​தக்​கது.

‘ஆளுநர் தனது அதி​காரங்​களைப் பயன்​படுத்​தும்​போது, அமைச்​சர​வை​யின் ஆலோ​சனையை கட்​டா​யம் பின்​பற்ற வேண்​டும். தண்​டனை தளர்​வு, மன்​னிப்பு போன்ற அதி​காரங்​கள் ஆளுநரின் தனிப்​பட்ட விருப்​பங்​கள் அல்ல.

அவை ஜனநாயக முறை​யில் தேர்ந்​தெடுக்​கப்​பட்ட அரசின் ஆலோ​சனை​யின் அடிப்​படை​யில் மட்​டுமே பயன்​படுத்​தப்பட வேண்​டிய​வை’ என்​பதை இத்​தீர்ப்பு உறுதி செய்​துள்​ளது. இது ஜனநாயகம், அரசி​யலமைப்பு ஆட்சி மற்​றும் மாநில உரிமை​களுக்​கான ஒரு முக்​கிய வெற்றி ஆகும். இவ்​வாறு அவர்​ தெரி​வித்​துள்​ளார்​.

SCROLL FOR NEXT