தமிழகம்

நீட் தனது வாக்குறுதியில் தோற்றுவிட்டது: மு.க.ஸ்டாலின் கண்டனம்

செய்திப்பிரிவு

சென்னை: ‘நீட் தேர்வு தனது அனைத்து வாக்​குறு​தி​களி​லும் முற்​றி​லு​மாகத் தோற்​று​விட்​டது. கூட்​டாட்​சித் தத்​து​வத்தை மதித்து மருத்​துவ மாணவர் சேர்க்கை அதி​காரத்தை மாநிலங்​களிடமே ஒப்​படைக்க வேண்​டும்’ என திமுக தலை​வர் மு.க.ஸ்​டா​லின் தெரி​வித்​துள்​ளார்.

இதுகுறித்து அவர் வெளி​யிட்​டுள்ள அறிக்​கை​: நாடு முழு​வதும் மாணவர்​கள் முன்​னெடுத்​துள்ள போராட்​டங்​கள் வெறும் ஒரு தேர்​வின் நம்​பகத்​தன்மை சீர்​குலைந்​ததற்​கான எதிர்​வினை மட்​டுமல்ல; தகுதி அடிப்​படையி​லானது என முன்​னிறுத்​தப்​பட்ட ஓர் அமைப்​பின் மீதான ஆழமான நம்​பிக்​கை​யிழப்​பையே வெளிப்​படுத்​துகின்​றன.

நீட்​டுக்கு எதி​ராக முதன் ​முதலில் எச்​சரிக்​கைக் குரல் எழுப்​பிய மாநிலம் தமிழ்​நாடு​தான். நீட் அறி​முகப்​படுத்​தப்​பட்​ட​ போது மத்​திய அரசு, ‘பல நுழைவுத் தேர்​வு​களை எழுதும் சுமை குறை​யும். கேப்​பிடேஷன் கட்​ட​ணம் மற்​றும் வணி​கமய​மாக்​கல் ஒழி​யும்.

மருத்​து​வக் கல்​வித் தரம் உயரும்’ என 3 முக்​கிய வாக்​குறு​தி​களை அளித்​தது. ஆனால், இந்த 3 வாக்​குறு​தி​களி​லும் நீட் முற்​றி​லு​மாகத் தோல்​வியடைந்​துள்​ளது. சமத்​து​வ​மின்​மை​யைக் குறைப்​ப​தற்​குப் பதிலாக, கற்​றலின் மையத்​தைப் பள்​ளி​களி​லிருந்து பயிற்சி மையங்​களுக்கு நீட் மாற்​றி​விட்​டது.

இதன்​மூலம் கிராமப்​புற, அரசுப் பள்​ளி, முதல் தலை​முறை மற்​றும் தாய்​மொழி வழி​யில் பயிலும் மாணவர்​கள் கடுமை​யாகப் பின்​னடைவை சந்​திக்​கின்​றனர். கேப்​பிடேஷன் கட்​ட​ணத்​துக்​குப் பதிலாக, பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்​புள்ள பயிற்சி மையக் கட்​ட​ணம் அந்த இடத்​தைப் பிடித்​துள்​ளது.

முது​நிலை மருத்​து​வப் படிப்​பு​களில் தனி​யார் கல்​லூரி இடங்​களை நிரப்​புவதற்​காக, தகு​திக்​கான பெர்​சென்​டைல் பலமுறை பூஜ்ஜி​யம் வரை குறைக்​கப்​பட்​டுள்​ளது. இது தகு​தியை முன்​னிறுத்​தும் முறை அல்ல; வசதி படைத்​தவர்​களின் ஆதிக்​கத்தை நிலைநிறுத்​தும் முறை​யாகும்.

அமெரிக்​கா, ஜெர்​மனி போன்ற நாடு​களில் பள்​ளிக் கல்வி மதிப்​பெண்​களைச் சமன்​படுத்​தும் முறை​யிலேயே சேர்க்கை நடை​பெறுகிறது. நீதி​யரசர் ஏ.கே.​ராஜன் குழு​வின் பரிந்​துரைப்​படி தமிழ்​நாடு சட்​டப்​பேரவை நீட் விலக்கு மசோ​தாவை ஒரு​மன​தாக நிறைவேற்​றியது.

மருத்​து​வக் கல்​லூரி​களை நிறு​வி, நிதி​யளித்​து பராமரிக்​கும் மாநிலங்​களுக்​கு, மாணவர் சேர்க்​கை​யைத் தீர்​மானிக்​கும் அதி​காரத்தை வழங்க வேண்​டும்.

மத்​திய அரசு ஒற்​றைத்​துவ மனப்​போக்​கைக் கைவிட்​டு, மாநிலங்​கள் மற்​றும் மாணவர்​கள் மீது அதிக நம்​பிக்கை வைக்க வேண்​டும். மருத்​து​வக் கல்​வி​யின் எதிர்​காலம், நியாய​மான, கூட்​டாட்​சித்தத்​து​வத்தை மதிக்​கும் அணுகு​முறையையே கோரு​கிறது. இவ்​வாறு அவர்​ தெரி​வித்​துள்​ளார்.

SCROLL FOR NEXT