தமிழகம்

முதல்வர் ஜோசப் விஜய்க்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்

செய்திப்பிரிவு

சென்னை: தமிழகத்​தின் புதிய முதலமைச்​ச​ராகப் பதவி​யேற்​றுள்ள ஜோசப் விஜய்க்​கு, திமுக தலை​வர் மு.க.ஸ்​டா​லின் வாழ்த்து தெரி​வித்​துள்ள அதேவேளை​யில், தமிழகத்​தின் நிதி​நிலை குறித்த முதல்​வரின் விமர்​சனத்​திற்​குப் பதிலடி கொடுத்​துள்​ளார்.

இது தொடர்​பாக அவர் வெளி​யிட்​டுள்ள எக்ஸ் பதி​வில் கூறி​யிருப்​ப​தாவது: தமிழக முதல்​வ​ராக பொறுப்​பேற்​றுள்ள தவெக தலை​வர் விஜய்க்கு எனது மனப்​பூர்​வ​மான வாழ்த்​துகளைத் தெரி​வித்​துக் கொள்​கிறேன். பதவி​யேற்​றதும் தாங்​கள் கையெழுத்​திட்​டுள்ள புதிய அறி​விப்​பு​களை வரவேற்​கிறேன்.

கடந்த அரசு ரூ.10 லட்​சம் கோடி கடனை வைத்​து​விட்டு கஜா​னா​வைத் துடைத்​து​விட்​டுச் சென்​றுள்​ள​தாகத் தங்​களின் முதல் உரை​யிலேயே குறிப்​பிட்​டிருக்​கிறீர்​கள்.

தமிழகத்​தின் கடன் அளவு அனு​ம​திக்​கப்​பட்ட வரம்​புக்கு உட்​பட்டே இருக்​கிறது என்​பது உங்​களுக்​குத் தெரி​யா​தா? பிப்​ர​வரி மாத பட்​ஜெட்​டிலேயே நிதி​நிலை குறித்து நாங்​கள் தெளி​வாக விளக்​கி​விட்​டோம்.

அதற்​குப் பிறகு​தான் நீங்​கள் மக்​களுக்​குப் பல வாக்​குறு​தி​களை அளித்​தீர்​கள். இப்​போது ‘அரசிடம் பணம் இல்​லை’ எனப் பேசி, உங்​களுக்கு வாக்​களித்த மக்​களை ஏமாற்றி திசை​திருப்​பாதீர்​கள்.

எடுத்த எடுப்​பிலேயே நிதிப் பற்​றாக்​குறையைப் பேச ஆரம்​பிக்க வேண்​டாம். மக்​களுக்​குக் கொடுக்​கத் தேவை​யான மனசும், ஆட்​சித் திறமை​யும்​தான் மிக முக்​கி​யம். கடந்த ஐந்து ஆண்​டு​களில் பல சவால்​களைச் சமாளித்​து​தான் நாங்​கள் எண்​ணற்ற மக்​கள்​நலத் திட்​டங்​களை நிறைவேற்​றினோம்.

நடை​முறைக்​குச் சாத்​தி​ய​மான வாக்​குறு​தி​களை மட்​டுமே அளிப்​ப​தாகக் கூறி ஆட்​சிக்கு வந்​துள்ள நீங்​கள், இப்​போது​தான் நிர்​வாகத்​துக்​குள் அடி​யெடுத்து வைக்​கிறீர்​கள்.

வாக்​குறு​தி​களை எப்​படி நிறைவேற்ற வேண்​டும் என்ற நுணுக்​கங்​களை விரை​வில் கற்​றுக்​கொள்​வீர்​கள் என நம்​பு​கிறேன். இவ்​வாறு அவர்​ தெரி​வித்​துள்​ளார்​.

SCROLL FOR NEXT