தமிழகம்

கனிமவளம் கடத்தப்படுவதை தடுக்கக்கோரி நாளை முதல் 3 நாட்கள் லாரிகள் வேலைநிறுத்தம்

மணல் லாரி உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு

செய்திப்பிரிவு

சென்னை: கனிம வளங்​கள் தொடர்ந்து கடத்​தப்​படுவதை தடுக்​கக் கோரி நாளை முதல் 3 நாட்​கள் லாரிகள் வேலைநிறுத்​தத்​தில் ஈடு​பட​வுள்​ள​தாக தமிழ்​நாடு மாநில மணல் லாரி உரிமையாளர்​கள் சங்​கங்​களின் கூட்​டமைப்​புத் தலை​வர் யுவ​ராஜ் தெரி​வித்​துள்​ளார்.

இது​தொடர்​பாக சென்​னை​யில் செய்​தி​யாளர்​களிடம் அவர் கூறிய​தாவது: லாரி​களில் அனுமதிக்​கப்​பட்ட எடை​யான 22 டன் மீறி, 30 டன் வரை கூடுதல் பாரம் ஏற்​று​வ​தால்​தான் கனிம வளங்​கள் தொடர்ந்து கடத்​தப்​படு​கின்​றன.

கூடுதல் எடை ஏற்​று​வதற்கு ஆர்​டிஓ மற்​றும் காவல்​துறை மூலம் லஞ்​சம் பெறப்​படு​கிறது. இத​னால் அரசுக்​கும் பொது​மக்​களுக்​கும் பெரு​மளவு இழப்பு ஏற்​படு​கிறது.

இந்த ஆட்சி பொறுப்​பேற்ற முதல் 3 மாதங்​கள் எந்தவித லஞ்​சமும் கனிமவள கொள்​ளைகளும் இல்​லாமல் இருந்​தது.

ஆனால் தற்​போது கடந்த ஆட்​சி​யைப் போலவே இந்த ஆட்​சி​யிலும் லஞ்​சம் கைமாறுகிறது. மலைகளில் கனிமக் கொள்ளை தடை​யின்றி நடக்​கிறது. ஆர்​டிஓவின் புரோக்​கர்​கள் பலர் தீபாவளி பண்​டிகை முன்​னிட்டு எங்​களிடம் மாமுல் கேட்​கின்​றனர்.

ஜிபே மூலமாக அனுப்​பும்​படி மிரட்​டு​கின்​றனர். இதைப்​பற்றி கனிம வளத்​துறை அதி​காரி​யிடம் எடுத்​துக் கூறினாலும் எந்த நட​வடிக்​கையும் இது​வரை எடுக்​கப்​பட​வில்லை. கனிம வளக் கடத்​தலை தடுக்க ஜிபிஎஸ் மற்​றும் இ-வே பில் போன்ற முறைகளை கொண்​டுவரு​வ​தாக கூறப்​பட்​டாலும், அவை முழு​மையாக நடைமுறைப்​படுத்​தப்​பட​வில்லை.

கடந்த இரண்டு கூட்​டங்​களில் ஜிபிஎஸ் கரு​வி​கள் மாற்​றப்​படும் என்று சொன்​னார்​கள். ஆனால் அது​வும் நடைமுறைக்கு வர​வில்லை.

இத​னால் இந்த பிரச்​சினைகளை முதல்​வர் கவனத்​துக்கு எடுத்து செல்​வதற்​காக நாளை (நவ.1) முதல் 3 நாட்​கள் லாரி​கள் வேலைநிறுத்​தத்​தில் ஈடு​பட​வுள்​ளன.

அதன்​படி 8 மாவட்​டங்​களில் 20 ஆயிரம் லாரி​கள் இயங்​காது. கனிம வளங்​களை தடுக்க ஆந்​திரா மற்​றும் கர்​நாடகா மாநிலங்​களை போல கடுமையான விதி​களை கொண்​டுவர வேண்​டும். இவ்​வாறு அவர் கூறினார்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT