தமிழகம்

செந்தில் பாலாஜி நண்பர் ரதேஷுக்கு லுக்-அவுட் நோட்டீஸ்: லஞ்ச ஒழிப்பு போலீஸார் நடவடிக்கை

செய்திப்பிரிவு

சென்னை: 2021 முதல் 25-ம் ஆண்டு வரையி​லான கால​கட்​டத்​தில் டாஸ்​மாக் நிறு​வனத்​தில் நடை​பெற்​ற​தாக கூறப்​படும் முறை​கேடு​கள் தொடர்​பாக சென்னை லஞ்ச ஒழிப்பு போலீஸார் கடந்த மாதம் 28-ம் தேதி வழக்​குப்​ப​திவு செய்​தனர்.

இந்த வழக்​கில் முன்​னாள் அமைச்​சர் செந்​தில் பாலாஜி, முன்​னாள் டாஸ்​மாக் மேலாண்மை இயக்​குநர் எஸ்​.​வி​சாகன் ஐ.ஏ.எஸ். டாஸ்​மாக் அதி​காரி​கள் ராமதுரை முரு​கன், பன்​னீர்​செல்​வம், பாஸ்​கர் மற்​றும் செந்​தில் பாலாஜி​யுடன் தொடர்​பில் இருந்​த​தாக கூறப்​படும் ரதேஷ், கார்த்​திக் மீது வழக்​குப் ​ப​திவு செய்​யப்​பட்​டது.

இந்த வழக்​கில் செந்தில் பாலாஜிக்கு நெருக்​க​மானவர்​களாக கூறப்​படும் கார்த்​திக், ரமேஷ் உட்பட 3 பேர் கைது செய்​யப்​பட்​டனர். அவர்​களிடம் நடத்​தப்​பட்ட விசா​ரணை, வங்கி பரிவர்த்​தனை​கள், கைப்​பற்​றப்​பட்ட ஆவணங்​கள் அடிப்​படை​யில் விசா​ரணை தீவிரப்​படுத்​தப்​பட்​டுள்​ளது.

வழக்​கில் தொடர்​புடைய​தாக கூறப்​படும் செந்​தில் பாலாஜி​யின் நண்​பர் ரதேஷை கண்​டு​பிடித்து விசா​ரணைக்கு உட்​படுத்​தும் வகை​யில், அவர் வெளி​நாடு தப்​பிச் செல்​வதை தடுக்க அனைத்து விமான நிலை​யங்​களுக்​கும் லுக்​-அவுட் நோட்​டீஸ் வழங்கி உள்​ள​தாக லஞ்ச ஒழிப்பு போலீ​ஸார் தெரி​வித்​துள்​ளனர்.

SCROLL FOR NEXT