தமிழகம்

அக்.14 முதல் 20 நாட்களுக்கு வண்டலூர் பூங்காவில் சிங்கம், மான் உலாவிடப் பகுதிகள் மூடல்

செய்திப்பிரிவு

வண்டலூர்: வண்​டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயி​ரியல் பூங்கா​வில் சிங்​கம் மற்​றும் மான் உலா​விடப் பகு​தி​களில் அவசர பழுது மற்​றும் பராமரிப்​புப் பணி​கள் மேற்​கொள்​ளப்பட உள்ளதால், அக்​டோபர் 14-ம் தேதி முதல் 20 நாட்களுக்கு அந்​தப் பகு​தி​கள் பார்​வை​யாளர்​களின் பயன்​பாட்​டுக்கு மூடப்​படும் என பூங்கா நிர்​வாகம் அறி​வித்​துள்​ளது.

இதுகுறித்து வெளி​யிடப்​பட்ட செய்​திக்​குறிப்​பு: பூங்​கா​வில் பார்வை​யாளர்​களின் பாது​காப்பு மற்​றும் விலங்​கு​களின் நலனைக் கருத்​தில் கொண்​டு, சிங்​கம் மற்​றும் மான் உலா​விடப் பகு​தி​களில் தேவை​யான பழுது மற்​றும் பராமரிப்​புப் பணி​கள் மேற்​கொள்​ளப்பட உள்​ளன. பணி​கள் தொடங்​கும் நாளான அக்​.14 முதல் 20 நாட்​களுக்கு இந்​தப் பகு​தி​களுக்கு பார்​வை​யாளர்​கள் அனு​ம​திக்​கப்பட மாட்​டார்​கள். பராமரிப்​புப் பணி​கள் நிறைவடைந்த இப்​பகு​தி​கள் மீண்​டும் திறக்​கப்​படும் தேதி குறித்து பின்னர் அறிவிக்​கப்​படும்.

இதனால், பூங்கா​வுக்கு வரும் பொது​மக்​கள் நிர்​வாகத்​தின் அறிவுறுத்​தல்​களைப் பின்​பற்றி ஒத்​துழைக்​கு​மாறு கேட்டுக்கொள்ளப்​பட்​டுள்​ளனர். பராமரிப்​புப் பணி​கள் நடைபெறும் காலத்​தில் பார்​வை​யாளர்​கள் திறந்​திருக்​கும் பகுதிகளை மட்​டுமே பயன்​படுத்த வேண்​டும். பூங்கா நிர்வாகத்தின் அறி​விப்பு வெளி​யான பின்​னரே இப்​பகு​தி​களுக்கு பார்​வை​யாளர்​கள் செல்ல அனு​மதி வழங்​கப்​படும். எனவே மக்கள் சிரமங்​களைத் தவிர்க்க திட்​ட​மிட்டு வரு​மாறு கேட்​டுக்​கொள்​ளப்​பட்​டுள்​ளது.

SCROLL FOR NEXT