தமிழகம்

ஜூலை 17, 20-ல் வட கடலோர தமிழகத்தில் மிதமான மழை

செய்திப்பிரிவு

சென்னை: மேற்கு தொடர்ச்சி மலை மாவட்​டங்​கள், வட கடலோர தமிழகத்​தில் ஓரிரு இடங்​களில் ஜூலை 17, 20 ஆகிய தேதி​களில் லேசானது முதல் மித​மான மழை பெய்​யக்​கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரி​வித்​துள்​ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய உயர​தி​காரி​யும், விஞ்​ஞானி​யு​மான வி.ஆர்​.துரை நேற்று வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு: மேற்கு திசைக் காற்​றின் வேக மாறு​பாடு காரண​மாக, ஜூலை 15, 16 ஆகிய தேதி​களில், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்​டங்​களில் ஓரிரு இடங்​களில் லேசானது முதல் மித​மான மழை பெய்​யக்​கூடும். ஜூலை 17-ம் தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்​டங்​கள், வடக்கு கடலோர தமிழகத்​தில் ஓரிரு இடங்​களி​ல் லேசானது முதல் மித​மான மழை பெய்​யக்​கூடும்.

ஜூலை 18, 19 ஆகிய தேதி​களில், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்​டங்​களில் ஓரிரு இடங்​களில் லேசானது முதல் மித​மான மழை பெய்​யக்​கூடும். ஜூலை 20-ம் தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்​டங்​கள், வட கடலோர தமிழகத்​தில் ஓரிரு இடங்​களி​லும், புதுச்​சேரி மற்​றும் காரைக்​கால் பகு​தி​களி​லும் லேசானது முதல் மித​மான மழை பெய்​யக்​கூடும்.

தமிழகம், புதுச்​சேரி​யில் ஓரிரு இடங்​களில் ஜூலை 16-ம் தேதி வரை அதி​கபட்ச வெப்​பநிலை 2 முதல் 4 டிகிரி செல்​சி​யஸ் வரை உயரக்​கூடும். இது த​விர உள் தமிழகத்​தில் ஓரிரு இடங்​களி​லும் வெப்​பநிலை 2 முதல் 4 டிகிரி செல்​சி​யஸ் இயல்பை விட அதி​க​மாக இருக்​கக்​கூடும். சென்னை மற்​றும் புறநகர் பகு​தி​களில் ஜூலை 15-ம் தேதி வானம் ஓரளவு மேகமூட்​டத்​துடன் காணப்​படும்.

SCROLL FOR NEXT