தமிழகம்

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: தாயின் 2-ம் கணவருக்கு சாகும் வரை ஆயுள்

செய்திப்பிரிவு

ஊட்டி: சிறுமியை பாலியல் வன்​கொடுமை செய்த வழக்​கில் தாயின் இரண்​டாம் கணவருக்கு சாகும்வரை ஆயுள் தண்​டனை விதித்து ஊட்டி விரைவு மகளிர் நீதி​மன்​றம் தீர்ப்​பளித்​துள்​ளது.

நீல​கிரி மாவட்​டம் தேவாலா எஸ்​டேட் பகு​தி​யைச் சேர்ந்​தவர் ஆறு​முகத்​தாய். இவருக்கு 13 வயதில் மகள் உள்​ளார். ஆறு​முகத்​தா​யின் கணவர் பிரிந்து சென்ற நிலை​யில், ராஜா (44) என்​பவரை இரண்​டாவ​தாக திரு​மணம் செய்து கொண்​டார்.

கடந்த 2019-ம் ஆண்டு ஜூலை 13-ம் தேதி, வீட்​டில் யாரும் இல்​லாத நேரத்​தைப் பயன்​படுத்​தி, சிறுமியை மிரட்டி ராஜா பாலியல் வன்​கொடுமை செய்​துள்​ளார். கடந்த 2020 மார்ச் மாதம் சிறுமி​யின் உடல்​நிலை​யில் மாற்​றம் தெரிந்​த​தால், சிறுமியை மருத்​து​வ​மனைக்கு அழைத்​துச் சென்று பரிசோ​தித்​ததில் அவர் கர்ப்​ப​மாக இருந்துள்ளார்.

சிறுமி​யிடம் விசா​ரித்​த​போது, ராஜா தன்னை பாலியல் வன்​கொடுமை செய்​ததை தெரி​வித்​துள்​ளார். புகாரின்பேரில் போக்சோ சட்​டத்​தில் தேவாலா அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் ராஜாவை கைது செய்​தனர். இந்த வழக்கு ஊட்​டி​ சிறப்பு விரைவு மகளிர் நீதி​மன்​றத்​தில் நடை​பெற்று வந்​தது.

குற்​றச்​சாட்​டு​கள் நிரூபிக்​கப்​பட்​டதால், ராஜாவுக்கு சாகும் வரை ஆயுள் தண்​டனை விதித்து நீதிபதி செந்​தில்​கு​மார் நேற்று முன்​தினம் தீர்ப்​பளித்​தார். மேலும், சிறுமிக்கு அரசு ரூ.5 லட்​சம் இழப்​பீடு வழங்க நீல​கிரி மாவட்ட ஆட்​சி​யருக்கு உத்​தர​விட்​டார்.

SCROLL FOR NEXT