தமிழகம்

பிரதமர் மோடியின் 76-வது பிறந்த நாள் விழா: ஆளுநர், முதல்வர், அரசியல் கட்சியினர் வாழ்த்து

செய்திப்பிரிவு

சென்னை: பிரதமர் மோடி தனது 76-வது பிறந்​த​நாளை நேற்று கொண்​டாடி​னார். அவருக்கு தமிழக ஆளுநர், முதல்​வர், அரசி​யல் கட்சி தலை​வர்​கள் வாழ்த்து தெரி​வித்​துள்​ளனர்.

இதுகுறித்து அவர்​கள் வெளி​யிட்​டுள்ள வாழ்த்​துச் செய்​தி​யில் கூறி​யிருப்​ப​தாவது:

ஆளுநர் ஆர்​.​வி.அர்​லேகர்: பிரதமர் மோடி​யின் தொலைநோக்​குப் பார்​வை​யும், நாட்​டின் சேவைக்​கான அர்ப்​பணிப்​பும், 2047-ம் ஆண்​டுக்​குள் வளர்ச்​சி​யடைந்த பாரதத்தை உரு​வாக்​கும் தேசிய இலக்​குக்கு புதிய உத்​வேகத்தை அளித்து வரு​கின்​றன.

முதல்​வர் விஜய்: வலிமை​யான இந்​தி​யாவை உரு​வாக்​கும் நோக்​கில் அர்ப்​பணிப்​புடன் செயல்​பட்​டு​வ​ரும் பிரதமர் நரேந்​திர மோடிக்கு எனது மனமார்ந்த பிறந்​த​நாள் வாழ்த்​துகள். நல்ல உடல் நலத்​துட​னும், நீண்ட ஆயுளு​ட​னும் நீடூழி வாழ உளமார வாழ்த்​துகிறேன்.

திமுக தலை​வர் மு.க.ஸ்​டா​லின்: பிரதமர் நரேந்​திர மோடிக்கு இனிய பிறந்​த​நாள் நல்​வாழ்த்​துகள். நல்​ஆரோக்​கி​யத்​துட​னும், மகிழ்ச்​சி​யுட​னும், நீண்ட ஆயுளு​ட​னும் வாழ வாழ்த்​துகிறேன்.

அதி​முக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி: தங்​களின் உறு​தி​யான தலை​மைத்​து​வ​மும், தேசத்​தின் மீதான தளராத அர்ப்​பணிப்​பும் இந்​தி​யா​வின் வளர்ச்​சி​யை​யும் செழிப்​பை​யும் தொடர்ந்து வலுப்​படுத்தி வரு​கின்​றன. தங்​களுக்கு நல்ல ஆரோக்​கிய​மும், நீண்ட ஆயுளும், தொடர்ந்து தேசப் பணி​யாற்​று​வதற்​கான ஆற்​றலும் கிடைக்க வாழ்த்​துகிறேன்.

பாஜக மாநில தலை​வர் நயி​னார் நாகேந்​திரன்: ‘வளர்ந்த பாரதம்’ என்ற உயரிய இலக்கை நோக்​கி, நாட்​டின் ஒவ்​வொரு குடிமக​னின் முன்​னேற்​றத்​தை​யும் மைய​மாகக் கொண்டு தொடர்ந்து உழைத்து வரும் பிரதமர் மோடி​யின் பொது​வாழ்​வுப் பணி மேலும் சிறக்​கட்​டும்.

பாமக தலை​வர் அன்​புமணி: பிரதமர் நரேந்​திர மோடி, நல்ல ஆரோக்​கி​யத்​துடன் நீண்​ட​காலம் வாழ்ந்​து, பொது​வாழ்க்​கை​யில் புதிய சாதனை​களைப் படைக்​க​வும், நாட்​டுக்கு சேவை​யாற்​ற​வும் வேண்​டும்.

தேமு​திக பொதுச் செய​லா​ளர் பிரேமல​தா: பிரதமர் மோடி நல்ல உடல்​நலத்​துட​னும், மகிழ்ச்​சி​யுட​னும், மனவலிமை​யுட​னும் நீண்ட ஆயுளு​டன் வாழ்ந்​து, நமது நாட்​டுக்​கும் நாட்டு மக்​களுக்​கும் தொடர்ந்து சேவை​யாற்ற இறைவன் அருள்​புரியட்​டும்.

அமமுக பொதுச் செய​லா​ளர் டிடிவி தினகரன்: நாட்​டுப்​பணி​யில் பிரதமரின் பயணத்​துக்கு மற்​றொரு நிறை​வான மற்​றும் அர்த்​த​முள்ள ஆண்​டின் தொடக்​க​மாக இந்​நாள் அமையட்​டும்.

மநீம தலை​வர் கமல்​ஹாசன்: நல்ல ஆரோக்​கி​யத்​தை​யும், தெம்​பை​யும் பெற்​று, நமது மாபெரும் தேசத்​துக்​குத் தொடர்ந்து சேவை​யாற்​றும் நல்​வாய்ப்​பு​களை​யும் வழங்க வேண்​டு​கிறேன்.

‘வீ த லீடர்ஸ்’ தலை​வர் அண்​ணா​மலை: பிரதமரின் ஓய்​வில்​லாத சேவை​யும், தொலைநோக்​குத் தலை​மை​யும், சமு​தா​யத்​தின் ஒவ்​வொரு பிரி​வினரை​யும் உயர்த்த வேண்​டும் என்ற தணி​யாத ஆர்​வ​மும் லட்​சக்​கணக்​கான மக்​களுக்​குத் தொடர்ந்து ஊக்​கமளித்து வரு​கின்​றன.

ஐஜேகே தலை​வர் ரவி பச்​ச​முத்​து: இந்​தி​யா​வின் வளர்ச்​சி, பொருளா​தார முன்​னேற்​றம், தொழில்​நுட்ப மேம்​பாடு மற்​றும் சர்​வ​தேச உறவு​கள் உள்​ளிட்ட பல்​வேறு துறை​களில் அரசை வழிநடத்தி வரும் பிரதமர் மோடி​யின் பொதுப்​பணி தொடர வாழ்த்​துகிறேன். இவ்​வாறு அவர்​கள் தெரி​வித்​துள்​ளனர்.

இதே​போல், பெருந்​தலை​வர் மக்​கள் கட்சி தலை​வர் என்​.ஆர்​.தன​பாலன் உள்​ளிட்ட பல்​வேறு அரசி​யல் கட்சி தலை​வர்​களும்​ பிரதமர்​ மோடிக்​கு வாழ்த்​து தெரி​வித்​துள்​ளனர்​.

SCROLL FOR NEXT