17 ஆண்டுகளுக்குப் பின்பு நடைபெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு விழா கோலாகலம்

லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
மீனாட்சி அம்மனின் தங்கக் கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றும் சிவாச்சாரியார்கள்.படம்: நா.தங்கரத்தினம்

மீனாட்சி அம்மனின் தங்கக் கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றும் சிவாச்சாரியார்கள்.படம்: நா.தங்கரத்தினம்

Updated on
2 min read

மதுரை: உல​கப் புகழ்​பெற்ற மதுரை மீனாட்சி அம்​மன் கோயி​லில் 17 ஆண்​டு​களுக்​குப் பின்பு நேற்று குட​முழுக்கு விழா கோலாகல​மாக நடை​பெற்​றது. வெளி​நாடு மற்​றும் தமி​ழ​கம் முழு​வ​தி​லும் இருந்து லட்​சக்கணக்கான பக்​தர்​கள் சுவாமி தரிசனம் செய்​தனர்.

மதுரை மீனாட்சி சுந்​தரேசுவரர் கோயி​லில் குட​முழுக்கு விழா 2009-ம் ஆண்டு நடை​பெற்​றது. 2022-ல் நடத்​தப்பட வேண்​டிய குட​முழுக்கு வீர​வசந்​த​ராயர் மண்​டபம் புதுப்​பிக்​கும் பணி மற்​றும் பெருந்​தொற்று காரணங்​களால் தள்​ளிப்​போனது. இதைத் தொடர்ந்து 2026-ல் குட​முழுக்கு நடத்த முடிவு செய்​யப்​பட்​டது. கோயில் நிதி ரூ.15.40 கோடி​யில் 86 திருப்​பணி​கள், உபய​தா​ரர்​கள் நிதி ரூ.16.89 கோடி​யில் 100 திருப்​பணி​கள் உட்பட மொத்​தம் ரூ.32.29 கோடி​யில் திருப்​பணி​கள் மேற்​கொள்​ளப்​பட்​டன. பணி​கள் முடிந்த நிலை​யில் செப்​.17-ல் குட​முழுக்கு நடத்த ஏற்​பாடு​கள் தொடங்​கின.

அதன்​படி மீனாட்சி அம்​மன் கோயிலுக்​குள் வடக்​காடி வீதி​யில் யாக​சாலை பூஜைகளுக்​காக 184 குண்​டங்​கள் அமைக்​கப்​பட்​டன. செப்​.11-ம் தேதி மாலை​யில் இருந்து முதல் கால யாக​சாலை பூஜை தொடங்​கியது. மூல​வர் மீனாட்சி அம்​மன், சுந்​தரேசுவரருக்கு மருந்து சாற்​றும் வைபவத்​தை​யொட்டி செப்​.11 முதல் 16-ம் தேதி வரை மூல​வர் சந்​நி​தி​கள் அடைக்​கப்​பட்​டன. செப்​.16-ம் தேதி பத்​தாம் கால யாக வேள்வி முடிந்து தெட்​சிணா​மூர்த்​தி, துர்க்​கை, லெட்​சுமி, பத்​ர​காளி, 63 நாயன்​மார்​கள் மற்​றும் சுற்​றுக்​கொடி மரங்​கள் உட்பட 414 பரி​வார தெய்​வங்​களுக்கு நேற்​று​முன்​தினம் குட​முழுக்கு நடை​பெற்​றது.

தொடர்ந்து நேற்று காலை 4 மணி முதல் 5.45 மணி வரை 12-ம் கால யாக வேள்வி நடை​பெற்​றது. பின்பு 6 மணி​யள​வில் கலசங்​கள் கோபுரங்​களுக்​குப் புறப்​பா​டானது. காலை 7.35 மணி​யள​வில் மீனாட்​சி, சுந்​தரேசுவரர் சந்​நி​தி​களின் தங்க விமானங்​கள் மற்​றும் ராஜகோபுரங்​களுக்கு புனித நீர் ஊற்றி குட​முழுக்கு விழா நடை​பெற்​றது.

காலை 7.50 மணிக்கு மூல​வர் மீனாட்சி அம்​மனுக்​கும், காலை 8.00 மணிக்கு மூல​வர் சுந்​தரேசுவரர் சுவாமிக்​கும் குட​முழுக்கு விழா நடை​பெற்​றது. விழா​வில் உபய​தா​ரர்​கள், நீதிப​தி​கள், ஐஏஎஸ், ஐபிஎஸ் உயர​தி​காரி​கள், 2 ஆயிரம் பக்​தர்​கள் உட்பட 11 ஆயிரம் பேர் மட்​டுமே கோயில் வளாகத்​திற்​குள் அனு​ம​திக்​கப்​பட்​டனர். இவ்​விழா​வில், தரு​மபுர ஆதீனம் மாசிலாமணி தேசிக ஞானசம்​பந்த பரமாச்​சா​ரிய சுவாமிகள், குன்​றக்​குடி திரு​வண்​ணா​மலை ஆதீனம் பொன்​னம்பல தேசிக பரமாச்​சா​ரிய சுவாமிகள், செங்​கோல் ஆதீனம் சிவப்​பிர​காச தேசிக சத்​தி​ய​ஞான பரமாச்​சா​ரிய சுவாமிகள் உள்​ளிட்​டோர் பங்​கேற்​ற​னர்.

மேலும், அமைச்​சர்​கள் சி.டி.ஆர்​.நிர்​மல்​கு​மார், சீ.ரமேஷ், பெ.​விஸ்​வ​நாதன், வி.சம்​பத்​கு​மார், கு.ஜெகதீஸ்​வரி, வே.க.​ராஜீவ், அரசுச் செயலர் வி.​ராஜா​ரா​மன், இந்து சமய அறநிலை​யத் துறை ஆணை​யர் டி.ஜி.​வினய், ஆட்​சி​யர் நிஷாந்த்கிருஷ்ணா, பொறுப்பு அலு​வலர்​கள் வீர​ராகவ ராவ், மதுசூதன் ரெட்​டி, மாநக​ராட்சி ஆணை​யர் கவுரவ் குமார், மதுரை ஆவின் பொது மேலா​ளர் முத்​து​மாதவன், அறங்​காவலர் குழுத் தலை​வர் மு.ருக்​மணி பழனிவேல் ராஜன், எம்​.பி. சு.வெங்​கடேசன், மேயர் (பொறுப்​பு) நாக​ராஜன் உள்​ளிட்டோர் பங்​கேற்​ற​னர்.

மாநகர காவல் ஆணை​யர் ராஜேந்​திரன் தலை​மை​யில் 6,500 போலீ​ஸார் பாது​காப்​புப் பணி​யில் ஈடு​படுத்​தப்​பட்​டனர். நகர் முழு​வதும் நேற்று அதி​காலை 12 மணி முதல் போக்​கு​வரத்து மாற்​றம் செய்​யப்​பட்டது. வெளியூர் பக்​தர்​கள் வந்து செல்​வதற்​குச் சிறப்​புப் பேருந்​துகள் இயக்​கப்​பட்​டன.

சித்​திரை வீதி​களில் நுழைய அனு​ம​திக்​காதது, புனித நீர் தெளிக்க விரி​வான ஏற்​பாடு செய்​யாதது குறித்து அமைச்​சர் நிர்​மல் ​கு​மாரிடம் பக்​தர்​கள் கேள்வி எழுப்​பினர். அசம்​பா​விதம் இல்​லாமல் பாது​காப்​பாகக் கும்​பாபிஷேகம் நடத்த முன்​னுரிமை அளிக்கப்​பட்​ட​தாக அமைச்​சர் பதில் அளித்​தார். குட​முழுக்கு விழாவை மிக​ச்சிறப்​பாக நடத்​தி​யுள்​ள​தாக அமைச்​சர் ரமேஷ் பெரு​மிதத்​துடன் தெரிவித்​தார்.

<div class="paragraphs"><p>மீனாட்சி அம்மனின் தங்கக் கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றும் சிவாச்சாரியார்கள்.படம்: நா.தங்கரத்தினம்</p></div>
திரிணமூல் காங்கிரஸ் பெயர், சின்னம் முடக்கம்: இடைத்தேர்தலுக்கு முன்பாக தேர்தல் ஆணையம் உத்தரவு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in