ஜெம் வீரமணி

 
தமிழகம்

ஜெம் வீரமணி பாலியல் வழக்கு விசாரணையை விரைவுபடுத்த வேண்டும்: பழனிசாமி உள்ளிட்ட தலைவர்கள் வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

சென்னை: ஜெம் வீரமணி மீதான பாலியல் வழக்கு விசா​ரணையை விரைவு ​படுத்த வேண்​டும் என பழனி​சாமி உள்​ளிட்ட அரசி​யல் கட்சித் தலை​வர்​கள் வலி​யுறுத்​தி​யுள்​ளனர். இதுதொடர்​பாக அவர்​கள் வெளி​யிட்ட அறிக்​கை​களில் கூறி​யிருப்​ப​தாவது:

அதி​முக பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமி: ஜெம் கிரானை ட்ஸ் வீரமணி பாலியல் வழக்​கில் இத்​தனை ஆண்​டு​களாக, பல சிறுமிகள் பாலியல் சீண்​டலுக்கு ஆளாகி இருப்​பது என்​பது, ஒரு சமூக​மாக வெட்​கித் தலைகுனிய வேண்​டிய அவலம். காவல்​துறை இந்த வழக்கை எந்​த​வித அழுத்​த​மும் இன்றி கையாள வேண்​டும்.

பெண்​கள், சிறுமிகள் தொடர்​பான பாலியல் குற்​றங்​களை அதற்​குரிய தன்​மையோடு அணுக வேண்​டும். பெண்​களுக்கு எதி​ரான இந்த பாலியல் குற்​றம் புரிந்​தவர்​கள் யாராக இருந்​தா​லும், அது எவ்​வளவு “பெரிய இடமாக” இருந்​தா​லும், யாருக்கு தொடர்பு இருந்​தா​லும், இதனை மறைக்க துணை நின்​றது எவ்​வளவு பெரிய அதி​கார​மாக இருந்​தா​லும், அனை​வர் மீதும் பாரபட்​சம் இன்றி அரசு சட்ட நடவடிக்கை எடுக்க வேண்​டும்.

மதி​முக பொதுச்​செய​லா​ளர் வைகோ: பல ஆண்டு கால​மாக இளம் பிஞ்​சுகளை நாசப்​படுத்​திய ஜெம் கிரானைட் வீரமணி வழக்​கில் வீரமணி மட்​டுமில்​லாமல், இதற்கு துணை போனவர்​கள் யாராக இருந்​தா​லும் அவர்​களை​யும் கண்​டறிந்து கைது செய்து குற்​றக்​கூண்​டில் நிறுத்தி தண்​டிக்க வேண்​டும். விசா​ரணையை விரைவு படுத்தி, நீதி​மன்​றத்​தில் குற்​றப்​பத்​திரிக்​கையை தாக்​கல் செய்து தண்​டனை பெற்​றுத்தர தமிழக அரசு நடவடிக்கை மேற்​கொள்ள வேண்​டும்.

மநீம தலை​வர் கமல்​ஹாசன்: பிர​முகர் போர்​வை​யில் அலை​யும் இழிந்​தோரின் செயல் எது​வரைக்​கும் செல்​லும் என்று ஜெம் கிரானைட்ஸ் வீரமணி வழக்கு காட்​டி​யிருக்​கிறது. பண பலத்​துக்கு அஞ்​சாமல் இதை வெளிக்​கொண்​டு​வந்​தவர்​கள் நன்​றிக்​குரிய​வர்​கள். இந்த விவ​காரத்​தில் தொடர்​புடையோர் மீது அறத்​தின் கரங்​கள் இரக்​கமின்றி நீளவேண்​டும். இனியொரு சம்​பவம் இது​போல் நடக்​கக்​கூடாது.

தமாகா தலை​வர் ஜி.கே.​வாசன்: ஜெம் வீரமணி வழக்​கில் யாரும் தப்​பித்​து​விடக்​கூ​டாது. பாலியல் வன்​கொடுமை​யில் பாதிக்​கப்​படு​வர்​களுக்கு நியா​யம் கிடைக்​க​வும், பெண்​களுக்கு எதி​ரான வன்​கொடுமை​களில் இருந்து வருங்​கால சமு​தா​யம் பாது​காக்​கப்​பட​வும் தமிழக அரசு கடுமை​யான நடவடிக்​கைகளை மேற்​கொள்ள வேண்​டும். எனவே, விசா​ரணையை விரைவுபடுத்தி குற்​ற​வாளி​கள் அனை​வரை​யும் விசா​ரணை வளையத்​திற்​குள் கொண்​டு​வந்து, உண்மை நிலையை வெளிப்​படுத்த வேண்​டும். குற்​ற​வாளி​கள் அனை​வருக்​கும் தண்​டனையை பெற்​றுத்தர வேண்​டும்.

அமமுக பொதுச்​செய​லா​ளர் டிடிவி தினகரன்: தொழில​திபர் வீரமணி வழக்​கில் 2024-ம் ஆண்​டிலேயே உரிய ஆதா​ரங்​களு​டன் புகார் அளித்​தும் காவல்​துறை எந்​த​வித நடவடிக்​கை​யும் எடுக்​க​வில்லை என அரசி​யல் பிர​முகர் முன்​வைத்​துள்ள குற்​றச்​சாட்டு பெரும் அதிர்ச்​சியை ஏற்​படுத்​தி​யுள்​ளது. உரிய ஆதா​ரங்​கள் இருந்​தும் விசா​ரணை நடத்​தாதது ஏன்? என அடுத்​தடுத்து எழும் கேள்வி​களின் பின்​னணி​யில் மிகப்​பெரிய வலை​யமைப்பு இருக்​கிறதோ? என்ற சந்​தேகத்தை ஏற்​படுத்​துகிறது. எனவே, வழக்​கின் விசா​ரணை நேர்​மை​யான, வெளிப்​படை​யான மற்​றும் முழு​மை​யான முறை​யில்​ நடை​பெற ஏது​வாக சிபிஐ வசம்​ ஒப்​படைக்​க வேண்​டும்.

தமிழக வாழ்​வுரிமைக் கட்சி தலை​வர் தி.வேல்​முரு​கன் : ஜெம் வீரமணி தொடர்​பான போக்சோ வழக்​கில் இது​வரை மேற்​கொள்​ளப்​பட்ட நடவடிக்​கைகளை உரிய கண்​காணிப்​புடன் மறுஆய்வு செய்​து, டிஜிட்​டல் சான்​றுகளின் உண்​மைத் தன்​மையை விரைந்து உறு​தி​செய்து குற்​றப்​பத்​திரிகை தாக்​கல் செய்ய வேண்​டும்​.

SCROLL FOR NEXT