தமிழகம்

ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனப்பதிவு சான்று டிஜிட்டல் முறையில் வழங்கப்படும் என்ற அரசாணையை எதிர்த்து வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

செய்திப்பிரிவு

சென்னை: தமி​ழ​கத்​தில் ஓட்டுநர் உரிமம் மற்​றும் வாக​னப் பதிவுக்​கான சான்று டிஜிட்​டல் முறை​யில் வழங்​கப்​படும் என்ற அரசாணையை எதிர்த்து தொடரப்​பட்ட வழக்​கில், தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது.

ஓட்​டுநர் உரிமம் மற்​றும் வாக​னப் பதிவுக்​கான சான்​றுகளை டிஜிட்​டல் வடி​வில் பொது​மக்​களே பதி​விறக்​கம் செய்து கொள்​ளும் நடை​முறை தமி​ழ​கத்​தில் கடந்த செப்​.12 முதல் அமலுக்கு வந்​துள்​ளது.

இந்​நிலை​யில், இந்த திட்​டம் தொடர்​பாக பிறப்​பிக்​கப்​பட்ட அரசாணையை எதிர்த்து பெங்​களூரு​வைச் சேர்ந்த தனி​யார் நிறு​வனம் சார்​பில் சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் வழக்கு தொடரப்​பட்​டது.

அதில், “டிஜிட்​டல்​ம​யம் தொடர்​பாக தமிழ்​நாடு மோட்​டார் வாகன சட்​டத்​தில் விரை​வில் திருத்​தம் கொண்டு வரப்​படும் என்றுதான் தமிழக அரசு அறி​

வித்​தது. எதிர்​காலத்​தில் கொண்டு வரக்​கூடிய திருத்​தத்தை சுட்​டிக்​காட்டி அதை உடனடி​யாக அமல்​படுத்த முடி​யாது.

மேலும் தமிழக அரசின் அரசாணை மத்​திய அரசின் மோட்​டார் வாகன சட்​டப் பிரி​வு​களுக்கு எதி​ரானது. எனவே ஓட்​டுநர் உரிமம் மற்​றும் வாக​னப்​ப​திவு டிஜிட்​டல் சான்று தொடர்​பாக பிறப்​பிக்​கப்​பட்ட அரசாணை, சட்ட திருத்​தத்​துக்கு தடை விதிக்க வேண்​டும்.

வழக்கு நிலு​வை​யில் உள்ள வரை பழைய நடை​முறைப்​படி ஓட்​டுநர் உரிமம் மற்​றும் வாக​னப் பதிவுக்​கான சான்​றுகளை வழங்க உத்​தர​விட வேண்​டும்” எனக் கோரப்​பட்​டிருந்​தது.

வழக்கை விசா​ரித்த தலைமை நீதிபதி எஸ்​.ஏ. தர்​மா​தி​காரி மற்​றும் நீதிபதி ஜி.அருள்​முரு​கன் ஆகி​யோர் அடங்​கிய அமர்​வு, இதுதொடர்​பாக தமிழக அரசு இரு​ வாரங்​களில் பதிலளிக்க உத்​தர​விட்டு விசா​ரணையைத் தள்ளி வைத்​துள்​ளனர்.

SCROLL FOR NEXT