லதா ரஜினிகாந்த்

 
தமிழகம்

‘மக்கள் மேடை’ - புதிய இயக்கம் தொடங்கினார் லதா ரஜினிகாந்த்

செய்திப்பிரிவு

சென்னை: ‘மக்​கள் மேடை’ எனும் புதிய இயக்​கத்தை தொடங்​கு​வ​தாக நடிகர் ரஜினி​காந்​தின் மனைவி லதா அறி​வித்​துள்​ளார். மாநிலத்​துக்கு சேவை செய்ய விரும்​பும் அனைத்து தரப்பு மக்​களும் எங்​களோடு கைகோர்க்கலாம் என அழைப்​பும் விடுத்​துள்​ளார்.

சமூக மற்​றும் கலாச்​சார தளங்​களில் தொடர்ச்​சி​யாக இயங்கி வரும் லதா ரஜினி​காந்த், ‘மக்​கள் மேடை’ என்ற புதிய மக்​கள் இயக்​கத்தை நேற்று தொடங்​கி​யுள்​ளார். ‘மக்​கள் மேடை - இது மக்​களின் இயக்​கம்’ என்ற முழக்​கத்​துடன், தமிழகத்​தின் வளர்ச்​சிக்​காக​வும், நன்​மை​களுக்​காக​வும் ஒன்​றிணைவோம் என்ற நோக்​கத்​துடன் இந்​தத் தளம் உரு​வாக்​கப்​பட்​டுள்​ளது.

இது தொடர்​பாக அவர் வெளி​யிட்​டுள்ள காணொலி​யில் கூறி​யிருப்​ப​தாவது: ‘மக்​கள் மேடை’ என்ற எங்​களது இயக்​கத்​துடன் சேர்ந்து இந்த மாநிலத்​துக்​காக சேவை செய்ய நினைக்​கும் அனை​வரும் ஒன்​றாக சேரலாம். ஒன்​றாக சேர்ந்​து, ஒரு பெரும் மக்​கள் சேவை​யாக, மக்​கள் சக்​தி ​யாக உரு​வாகி இந்த மாநிலத்​துக்கு பல நன்​மை​களை செய்ய முன்​வாருங்​கள். ஒன்​றாக சேர்​வோம், ஆக்​கபூர்​வ​மான காரி​யங்​களை செய்​வோம்.

இந்த மக்​கள் மேடை இயக்​கத்​தில் மூத்த குடிமக்​கள், குடிமைப்​பணி அதி​காரி​கள், அரசு அதி​காரி​கள், ஆசிரியர்​கள், விளை​யாட்டு வீரர்​கள், ராணுவத்​தினர் என யாராக இருந்​தா​லும் உங்​களின் அனுபவங்​களை எங்​களுக்கு கொடுக்​கலாம். எங்​களு​டன் தொடர்பு கொண்​டு, தமிழகத்​துக்​காக​வும், அந்​தந்த தொகு​திக்​காக​வும் நீங்​கள் வேலை செய்​ய​லாம். மாநிலத்​துக்​காக வேலை செய்​யும் உள்​ளூர் தலை​வர்​களை உரு​வாக்க நாங்​கள் விரும்​பு​கிறோம். மாநிலத்​துக்கு தேவை​யான யோசனை​களை தந்து சேவை​யாற்ற விரும்​பும் அனைத்து தரப்பு மக்​களும் எங்​களோடு கைக்​கோர்க்​கலாம். இவ்​வாறு அதில்​ கூறியுள்​ளார்​.

SCROLL FOR NEXT