எல்.முருகன் | கோப்புப்படம்

 
தமிழகம்

மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் ராஜினாமா - கட்சிப் பணிக்கு திரும்புவதாக அறிவிப்பு

வெற்றி மயிலோன்

சென்னை: 2029 மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாகத் தமிழகத்தில் பாஜகவை வலுப்படுத்துவதற்காக, மத்திய இணை அமைச்சர் பதவியில் இருந்து விலகுவதாக எல்.முருகன் தெரிவித்துள்ளார். 2029 தேர்தலுக்கு கட்சிப் பணியாற்ற உள்ளதாக அவர் அறிவித்துள்ளார்.

தனது ராஜினாமா குறித்து பிரதமர் மோடிக்கு அனுப்பிய 5 பக்க கடிதத்தை எக்ஸ் தளப் பக்கத்தில் பகிர்ந்த அவர், ‘பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் பாரத மாதாவுக்கும், தமிழகத்துக்கும் சேவையாற்றியது என் வாழ்வின் மிகப் பெரிய கவுரவமாகும்.

தினக்கூலித் தொழிலாளர்களின் மகனாகப் பிறந்து, பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலான மத்திய அமைச்சரவையில் பணியாற்றியது என் வாழ்வின் மிகப் பெரிய பாக்கியமாகும்.

இப்போது, ​​நான் மீண்டும் அடிமட்ட அளவில் களப்பணியாற்றவும், நமது கட்சித் தொண்டர்களுடன் இணைந்து செயல்படவும், 2029 மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாகத தமிழகத்தில் பாஜகவை வலுப்படுத்த முழுநேரமாக என்னை அர்ப்பணிக்கவும் விரும்புகிறேன். முதலில் தேசம்; அடுத்ததாகக் கட்சி; இறுதியாகவே தனிநபர்’ எனத் தெரிவித்துள்ளார்.

மத்திய இணையமைச்சர் பதவியில் இருந்து ராஜினாமா செய்ததுடன், மாநிலங்களவை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் தன்னை விடுவிக்குமாறும் பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT