“பாசிச எதிர்ப்புக்கு அழைக்காதீர் என விஜய் சொன்னாரா?” - காங்கிரஸுக்கு தயாநிதி மாறன் கேள்வி

தயாநிதி மாறன்

தயாநிதி மாறன்

Updated on: 
1 min read

சென்னை: ‘பழக்க வழக்கமெல்லாம் பனையூருக்கு வந்து காபி சாப்பிடுவதோடு நிறுத்திக்கொள்ள வேண்டும். பாசிச எதிர்ப்புக்கெல்லாம் என்னைக் கூப்பிடாதீர்கள் என செவிட்டில் விசிலடித்து அனுப்பிவிட்டாரா?’ என தவெக - காங்கிரஸ் கூட்டணியை திமுக எம்.பி தயாநிதி மாறன் விமர்சித்துள்ளார்.

எஸ்ஐஆர் விவகாரத்தில் தேர்தல் ஆணையம் மற்றும் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ், தேஜஸ்வி யாதவ் உள்ளிட்ட இண்டியா கூட்டணியின் 11 தலைவர்கள் மனுத் தாக்கல் செய்துள்ளனர். இதில் தவெக தலைவரும், முதல்வருமான விஜய்யின் பெயர் இடம்பெறாதது குறித்து திமுக எம்.பி தயாநிதி மாறன் விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘பாசிசம், பாயாசம் எனப் பஞ்ச் பேசும் நடிகர் பெயர் இதிலும் காணவில்லையே? என்ன ஆச்சு?

சாதாரணமாக பேசும்போது ஒன்று சொல்லுவார்கள், வா, போ, பேசு, அப்படியே வந்தாலும் ஒரு காபி தருகிறேன் சாப்பிட்டுவிட்டு போ, அதற்கு மேலே எதையும் கேட்காதே என்பார்கள்… அப்படிதான் இதையும் பார்க்க வேண்டும் போல.

பழக்க வழக்கமெல்லாம் பனையூருக்கு வந்து காபி சாப்பிடுவதோடு நிறுத்திக் கொள்ள வேண்டும். பாசிச எதிர்ப்புக்கெல்லாம் என்னைக் கூப்பிடாதீர்கள் என செவிட்டில் விசிலடித்து அனுப்பிவிட்டாரா?

காங்கிரஸ் உள்ளிட்ட துரோகிகள் கழண்டுகொண்ட பின்பும், இடைத்தேர்தலில் திமுகவின் வாக்கு சதவீதம் அப்படியே இருப்பதைப் பார்த்து, நீங்கள் வாக்குவங்கி இல்லாத டம்மி பீஸ்கள்தான் எனும் 'கம்பெனி சீக்ரட்' டம்மி முதல்வருக்கே தெரிந்துவிட்டதோ' எனத் தெரிவித்துள்ளார்.

<div class="paragraphs"><p>தயாநிதி மாறன்</p></div>
“யூனிட் ரூ.35 மின் ஒப்பந்தத்தில் மெகா ஊழல்” - தவெக அரசு மீது பழனிசாமி குற்றச்சாட்டு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in