கு.பா.கிருஷ்ணன்
சென்னை: தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத் தலைவராக முன்னாள் அமைச்சர் கு.பா.கிருஷ்ணனை நியமனம் செய்து தமிழக முதல்வர் ச.ஜோசப் விஜய் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு: ஏழை, எளிய மக்களின் வாழ்விடங்களின் மேம்பாட்டுக்காக உருவாக்கப்பட்ட தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மூலம் குடியிருப்புகளை உருவாக்குதல், உறைவிடங்களில் மறுகுடியமர்வு செய்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தமிழக முதல்வர் ச.ஜோசப் விஜய் இன்று (22.05.2026) தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் பல்வேறு நலத்திட்டங்களை மேற்கொள்வதற்கு தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் தலைவராக கு.பா. கிருஷ்ணனை நியமனம் செய்து ஆணையிட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.