கிருஷ்ணசாமி

 
தமிழகம்

அரசு மாணவர் விடுதிகளில் மாட்டிறைச்சி: தமிழகம் முழுவதும் 30-ம் தேதி ஆர்ப்பாட்டம் - கிருஷ்ணசாமி அறிவிப்பு

செய்திப்பிரிவு

கோவை: அரசு மாணவர் விடு​தி​களில் மாட்​டிறைச்சி உணவு வழங்​கப்​படும் என்ற அமைச்​சரின் பேச்சை கண்​டித்து வரும் 30-ம் தேதி தமிழகம் முழு​வதும் ஆர்ப்​பாட்​டம் நடத்​தப்​படும் என புதிய தமிழகம் கட்​சித் தலை​வர் க.கிருஷ்ண​சாமி அறி​வித்​துள்​ளார்.

கோவை​யில் நேற்று செய்​தி​யாளர்​களிடம் அவர் தெரி​வித்​த​தாவது: தமிழகத்​தில் அரசு மாணவர் விடு​தி​களில் வழங்​கப்​படும் உணவு சரிவர வேகாமல், அரைவேக்​கா​டாக இருப்​ப​தாகப் புகார்​கள் வரு​கின்​றன. விடு​தி​களில் நில​வும் அடிப்​படை அவலங்​களை சரிசெய்ய வேண்​டிய பொறுப்​பில் உள்​ளவர்​கள், அங்கு மாட்​டிறைச்சி உணவு வழங்​கப்​படும் என பேசிவரு​வது எந்த விதத்​தி​லும் ஏற்​கத்​தக்​கதல்ல.

அரசு பணத்​தில் மாணவர்​களுக்கு மாட்​டிறைச்சி உணவை வலிந்து திணிக்க முயற்​சிப்​பது, ஒட்​டுமொத்த மக்​களின் உணர்​வு​களைப் புண்​படுத்​தும் செய​லாகும். தனிப்​பட்ட உணவுப் பழக்​கங்​களை மாணவர்​கள் மீது திணிக்​கும் போக்கை உடனடி​யாக கைவிட வேண்​டும்.

சர்ச்​சைக்​குரிய வகையில் பேசிய அமைச்சர் வன்னியரசு பகிரங்​க ​மாக மன்​னிப்​புக் கேட்​டு, கருத்தை திரும்​பப் பெற வேண்​டும். அமைச்​சரின் பேச்சை கண்​டித்து வரும் 30-ம் தேதி தமிழகத்​தின் அனைத்து மாவட்ட ஆட்​சி​யர் அலு​வல​கங்​கள்முன்​பும், அமைச்​சரின் வீட்​டின் முன்​பும் புதிய தமிழகம் கட்​சி​யின் சார்​பில் ஆர்ப்​பாட்​டம் நடை​பெறும்.

எந்​தவொரு நியாய​மான முகாந்​திர​மும் இன்​றி, தேர்ந்​தெடுக்​கப்​பட்ட குறுகிய காலத்​திலேயே சுயநல ஆதா​யங்​களுக்​காகப் பதவியை ராஜி​னாமா செய்​து​விட்​டுத் திணிக்​கப்​படும் இந்த இடைத்​தேர்​தல் அர்த்​தமற்​றது. இது ஜனநாயகத்​துக்கு எதி​ரான தவறான முன்​னு​தா​ரணம்.

கொங்கு இளைஞர் பேர​வை, புரட்சி பாரதம் உள்​ளிட்ட 15-க்​கும் மேற்​பட்ட அமைப்​பு​கள் அங்​கம் வகிக்​கும் அனைத்​துக் கட்​சிக் கூட்​டமைப்​பு, இந்த இடைத்​தேர்​தலில் போட்​டி​யிடவோ அல்​லது யாருக்​கும் ஆதரவு அளிக்​கவோ போவ​தில்​லை. இவ்​வாறு தெரி​வித்​தார்.

SCROLL FOR NEXT