தமிழகம்

ரூ.20 கோடியில் 47 ஊழியர்களுக்கு கார் பரிசு: 30-ம் ஆண்டு விழாவில் ஹைலைட் குழுமம் தாராளம்

செய்திப்பிரிவு

கோழிக்கோடு: கேரள மாநிலம் கோழிக்​கோடில் கடந்த 1996-ம் ஆண்டு ஹைலைட் குழு​மம் தொடங்​கப்​பட்​டது. இக்​குழு​மம் கேரளா​வின் முதல் ஒழுங்​கமைக்​கப்​பட்ட சில்​லறை வணிக மைய​மான ‘ஃபோகஸ் மால்’ முதல், கோழிக்​கோடு மற்​றும் திருச்​சூரில் உள்ள பிரம்​மாண்​ட​மான ‘ஹைலைட் மால்​கள்’ வரை பல திட்​டங்​களை கட்டி முடித்​துள்​ளது.

இந்​நிலை​யில், தனது 30-வது ஆண்டு விழாவைக் கொண்​டாடும் வித​மாக, 47 ஊழியர்​களின் பணி​யைப் பாராட்டி ரூ.20 கோடி மதிப்​பிலான கார்​களைப் பரி​சாக வழங்​கி​யுள்​ளது. இதில் ரேஞ்ச் ரோவர், ஆடி க்யூ8 மற்​றும் லேண்ட் ரோவர் டிஃபென்​டர் போன்ற சொகுசு கார்​களு​டன், டாடா ஹாரியர், கியா செல்​டோஸ், ஹூண்​டாய் கிரெட்டா மற்​றும் ஸ்கோடா கைலாக் உள்​ளிட்ட மாடல்​களும் அடங்​கும்.

          

தங்​கள் ஊழியர்​களுக்​காகச் செய்​யப்​பட்​டுள்ள இந்த மிகப்​பெரிய முதலீடு, நிறு​வனத்​தின் ‘மனிதநேய அணுகு​முறை’ மற்​றும் ஊழியர்​கள் மீதான அர்ப்​பணிப்​பைக் காட்​டு​கிறது என்று அந்​நிறு​வனம் வெளி​யிட்​டுள்ள அறிக்​கை​யில் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

இதுகுறித்து ஹைலைட் குழு​மத்​தின் தலை​வர் பி. சுலை​மான் கூறும்​போது, “கடந்த முப்​பது ஆண்​டு​களாக, கேரளா​வின் உள்​கட்​டமைப்​பைச் சிறந்த முறை​யில் மேம்​படுத்​து​வ​தில் நாங்​கள் கவனம் செலுத்தி வரு​கிறோம்” என்​றார்.

SCROLL FOR NEXT