சென்னையில் நேற்று நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பேசிய காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே . உடன் , வேணுகோபால், மாநிலத் தலைவர் செல்வப் பெருந்தகை உள்ளிட்டோர். படம்: எல். சீனிவாசன்

 
தமிழகம்

“மகளிர் இடஒதுக்கீடு; எதிர்க்கட்சிகள் மீது பிரதமர் பொய் புகார்” - கார்கே கண்டனம்

செய்திப்பிரிவு

சென்னை: ‘மகளிர் இடஒதுக்​கீடு மசோ​தாவை எதிர்க்​கட்​சிகள் தோற்​கடித்​த​தாகப் பிரதமர் மோடி பொய் கூறிமக்​களை திசை​திருப்​பு​கிறார்” என்று அகில இந்​திய காங்​கிரஸ் தலை​வர் மல்​லி​கார்​ஜுனா கார்கே குற்​றம்​சாட்​டி​யுள்​ளார்.

இதுகுறித்து சென்​னை​யில் செய்​தி​யாளர்​களிடம் அவர் கூறிய​தாவது: தொகுதி மறு​வரையறை மசோதா தோல்​வியடைந்​ததை மறைத்​து, மகளிர் இடஒதுக்​கீடு மசோ​தாவை எதிர்க்​கட்​சிகள் எதிர்ப்​ப​தாக மோடி கூறு​வது அப்​பட்​ட​மான பொய். மகளிர் இடஒதுக்​கீடு மசோதா 2023-ம் ஆண்​டிலேயே நிறைவேற்​றப்​பட்​டு​விட்​டது, அதற்கு நாங்​களும் ஆதரவு அளித்​தோம். இம்​மசோ​தாவை அப்​போதே நாங்​கள் அமல்​படுத்​தக் கோரிய​போது, ‘மக்​கள்​தொகை கணக்​கெடுப்பு மற்​றும் தொகுதி மறு​வரையறை முடிந்த பின்​னரே சாத்​தி​யம்’ என பிரதமர் கைவிரித்​தார். ஆனால் இப்​போது எதிர்க்​கட்​சிகள் மீது பழி​போடு​கிறார்.

அரசியல் நாடகம்: உண்​மை​யில், இம்​மசோ​தா​வில் இணைக்​கப்​பட்​டுள்ள ‘தொகுதி மறு​வரையறை’ அம்​சமே தென்​னிந்​திய மாநிலங்​களின் உரிமை​களைப் பறிக்​கும் என்​ப​தால் அதை எதிர்க்​கிறோம். பெண்​களுக்கு இடஒதுக்​கீடு வழங்க உண்​மை​யிலேயே மோடிக்கு எண்​ணம் இருந்​தால், தற்​போதைய 543 தொகு​தி​களி​லேயே 33 சதவீத இடஒதுக்​கீட்டை வழங்​கலாம். பாஜக அரசுக்கு பெண்​கள் மீதான அன்​பல்ல, வெறும் அரசி​யல் நாடகம்.

மோடி​யும் அமித் ஷாவும் மக்​களால் தேர்ந்​தெடுக்​கப்​பட்ட அரசாங்​கங்​களைக் கவிழ்ப்​ப​தையே வேலை​யாகக் கொண்​டுள்​ளனர். சிபிஐ, அமலாக்​கத் துறை மூலம் எதிர்க்​கட்​சி​யினரை மிரட்டி ஜனநாயகத்​தைச் சீரழிக்​கிறார்​கள். தமிழகம், பெரி​யார், அண்​ணா, காம​ராஜர் மற்​றும் கலைஞர் ஆகியோரின் கொள்கை வழி​வந்த மண். அண்​ணா​வின் பெயரில் கட்சி நடத்​தும் அதி​முக, சமத்​து​வத்தை நம்​பாத பாஜக-வுடன் இணைவது அண்​ணா​வின் தத்​து​வங்​களுக்​குச் செய்​யும் துரோகம்.

தமிழகத்​தின் உரிமை​களைப் பாது​காக்க காங்​கிரஸ் - திமுக கூட்​ட​ணியை மக்​கள் வலுப்​படுத்த வேண்​டும். மாற்​றாக வரும் சில கட்​சிகள் மதச்​சார்​பற்ற வாக்​கு​களைப் பிரித்​து, மறை​முக​மாக பாஜக-வுக்கே உதவும். எனவே, மக்​கள் விழிப்​புடன் இருந்து எங்​கள் கூட்​ட​ணிக்கு வாக்​களிக்க வேண்​டும். இவ்​வாறு அவர் தெரி​வித்​தா​ர்.

SCROLL FOR NEXT