தமிழகம்

கரூரில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு அரசு பணி: தமிழக அரசு பதில் அளிக்க அவகாசம்

செய்திப்பிரிவு

கரூர் கூட்ட நெரிசலில் உயி​ரிழந்​தவர்​களின் குடும்​பத்​தினருக்கு அரசு வேலை வழங்​கிய அரசாணை ரத்து செய்​யப்​பட்​டதை எதிர்த்து தொடரப்​பட்ட மேல்​முறையீட்டு வழக்​கில் தமிழக அரசு விளக்க மனு தாக்​கல் செய்ய 4 வாரம் அவகாசம் வழங்கி உச்​ச நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது.

கடந்த 2025-ம் ஆண்டு செப்​டம்​பர் மாதம் கரூர் மாவட்​டம் வேலுச்​சாமிபுரத்​தில் த.வெ.க தேர்​தல் பரப்​புரைக் கூட்​டத்​தில் ஏற்​பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயி​ரிழந்​தனர். உயிரிழந்தவர்களின் குடும்​பங்​களுக்கு உதவும் வகை​யில், அவர்​களது குடும்​பங்​களைச் சேர்ந்த 31 பேருக்கு கருணை அடிப்​படை​யில் அரசு வேலை வழங்கி தமிழக அரசு அரசாணை பிறப்​பித்​தது. இதற்​கான பணி நியமன ஆணைகளை முதலமைச்​சர் விஜய் வழங்​கினார்.

இதனை எதிர்த்து சென்னை உயர்​நீதி​மன்ற மதுரைக் கிளை​யில் நாம் தமிழர் கட்​சியை சேர்ந்த தீரன் திரிமுருகன் என்​பவரால் தொடரப்​பட்ட வழக்கை விசா​ரித்த நீதி​மன்​றம், பாதிக்​கப்​பட்ட குடும்​பத்​தினருக்கு அரசு வேலை வழங்​கிய தமிழக அரசின் அரசாணையை ரத்து செய்து உத்​தர​விட்​டது.

இந்த உத்​தரவை எதிர்த்து தமிழக அரசு மற்​றும் பாதிக்​கப்​பட்ட குடும்​பங்​களைச் சேர்ந்த பிர​பாகரன், செல்​வகுமார், ஆனந்​தஜோதி உள்​ளிட்​டோர் உச்​சநீதி​மன்​றத்​தில் மேல்​முறையீட்டு மனுக்​களைத் தாக்​கல் செய்​தனர்.

இந்த வழக்கை விசா​ரித்த உச்​சநீதி​மன்​றம், சென்னை உயர்​நீதி​மன்​றத்​தின் உத்​தரவுக்கு இடைக்​காலத் தடை விதித்​திருந்​தது. இந்த மேல்​முறையீட்டு வழக்கு உச்​சநீதி​மன்​றத்​தில் நீதிபதி ஜெ.பி.பர்​திவாலா தலை​மையி​லான அமர்​வில் மீண்​டும் விசா​ரணைக்கு வந்​தது.

அப்​போது தமிழக அரசு தரப்​பில் ஆஜரான மூத்த வழக்​கறிஞர் அபிஷேக் மனு சிங்வி, ‘இந்த விவகாரம் தொடர்​பாக எதிர்​தரப்​பினர் தாக்​கல் செய்​துள்ள பதில் மனுவுக்கு விளக்​கமளித்து மனு தாக்​கல் செய்ய கூடுதல் அவகாசம் தேவைப்​படுவ​தாகவும், எனவே வழக்​கின் விசா​ரணையை ஒத்​திவைக்க வேண்​டும்’ என்​றும் கோரிக்கை வைத்​தார்.

அப்போது நீதிபதிகள், ‘அரசின் நிலைப்​பாட்​டில் மாற்​றம் இல்​லாத​போது விளக்க மனு தாக்​கல் செய்ய எதற்​காக கூடுதல் அவகாசம் கோரு​கிறீர்​கள்’ என நீதிப​தி​கள் கேள்வி எழுப்​பியதோடு, இந்த விவகாரத்​தில் தமிழக அரசு விளக்க மனு தாக்​கல் செய்ய 4 வார கால அவகாசம் வழங்கி வழக்​கின் விசா​ரணையை டிசம்​பர் 8-ம் தேதிக்கு ஒத்​திவைத்து உத்​தர​விட்​டனர்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT