கரூர் பழைய பேருந்து நிலைய ரவுண்​டானா அருகே வைக்​கப்​பட்​டிருந்த பதாகை முன்பு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்​திய மாநில துணை பொதுச் செய​லாளர் எம்​.ஆர்​.​விஜய​பாஸ்​கர், எம்​எல்ஏ ம.சத்​யா, மாவட்​டச் செய​லா​ளர்​கள்​ வி.பி.ம​தி​யழகன்​, பாலசுப்​பிரமணி​யன்​ உள்​ளிட்​டோர்​. படம்​: க.​ரா​தாகிருஷ்ணன்

 
தமிழகம்

கரூர் நெரிசல் சம்பவத்தின் முதலாமாண்டு நினைவேந்தல்: குடும்பத்தினர், தவெகவினர் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி

செய்திப்பிரிவு

கரூர்: கரூர் தவெக கூட்ட நெரிசலில் உயி​ரிழந்​தவர்​களின் முதலா​மாண்டு நினைவு நாளை முன்​னிட்டு உறவினர்​கள், தவெக​வினர் மெழுகு​வர்த்தி ஏந்தி கண்​ணீர் அஞ்​சலி செலுத்​தினர்.

சட்​டப்​பேரவை பொதுத் தேர்​தலை​யொட்டி கரூர் வேலு​சாமிபுரத்​தில் கடந்த ஆண்டு செப்​.27-ம் தேதி தவெக தலை​வர் விஜய் பங்​கேற்ற பிரச்​சா​ரக் கூட்​டம் நடந்​தது. அந்​தக் கூட்​டத்​தில் ஏற்​பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயி​ரிழந்​தனர். 100-க்​கும் மேற்​பட்​டோர் காயமடைந்​தனர். இதுதொடர்​பான வழக்கை சிபிஐ விசா​ரித்து வரு​கிறது.

இந்த துயர சம்​பவத்​தின் முதலா​மாண்டு நினைவு நாள் நேற்று அனுசரிக்​கப்​பட்​டது. இதையொட்​டி, தவெக சார்​பில் கரூர் பேருந்து நிலைய ரவுண்​டானா அருகே மெழுகு​வர்த்தி ஏந்தி அஞ்​சலி செலுத்​தும் நிகழ்ச்சி நடை​பெற்​றது. இதில், அலங்​கரிக்​கப்​பட்ட மேடை​யில் வைக்​கப்​பட்​டிருந்த பதாகை​யில் உயி​ரிழந்த 41 பேரின் புகைப்​படங்​களுக்கு பதிலாக, எரி​யும் மெழுகு​வர்த்தி படங்​கள், அதன் கீழே உயி​ரிழந்​தவர்​களின் பெயர்​கள் இடம் பெற்​றிருந்​தன.

மாநில துணைப் பொதுச் செய​லா​ள​ரும், முன்​னாள் அமைச்​சரு​மான எம்​.ஆர்​.​விஜய​பாஸ்​கர், கிருஷ்ண​ராயபுரம் எம்​எல்ஏ ம.சத்​யா, மாவட்​டச் செய​லா​ளர்​கள் வி.பி.ம​தி​யழகன் (மேற்​கு), பாலசுப்​பிரமணி​யன் (கிழக்​கு) உள்​ளிட்ட நிர்​வாகி​கள், கட்​சி​யினர் மலர்​வளை​யம் வைத்​தும் மெழுகு​வர்த்தி ஏந்​தி​யும் மவுன அஞ்​சலி செலுத்​தினர். உயி​ரிழந்​தவர்​களின் குடும்​பத்​தினர், உறவினர்​கள் மலர்​வளை​யம் வைத்​து, கண்​ணீர் அஞ்​சலி செலுத்​தினர்.

திமுக துணைப் பொதுச் செய​லா​ளர் கனி​மொழி வெளி​யிட்​டுள்ள எக்​ஸ் தள பதி​வில், ‘கரூரில் ஏற்​பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி குழந்​தைகள், பெண்​கள் உட்பட 41 பேர் உயி​ரிழந்த கோர சம்​பவம் நிகழ்ந்து ஓராண்டு கடந்​து​விட்​டது.

இத்​துயர சம்​பவம் ஏற்​படுத்​திய ரணம், தமிழ் மக்​களின் மனங்​களில் ஆறாவடு​வாக இருக்​கிறது. இனி இது​போன்ற ஒரு துயர நிகழ்வு எங்​கும் நடை​பெறாத வகை​யில், அனை​வரும் பொறுப்​புடன் செயல்பட வேண்​டும். உயி​ரிழந்​தவர்​களுக்கு எனது அஞ்​சலி’ என தெரி​வித்​துள்​ளார்.

முதல்​வர் விஜய் உருக்​கம்: முதல்​வர் விஜய் நேற்று வெளி​யிட்ட எக்​ஸ் வலைதள பதி​வில் கூறி​யுள்​ள​தாவது: என் நெஞ்​சில் குடி​யிருக்​கும் அனை​வருக்​கும் வணக்​கம். கடந்த ஆண்டு இதே நாள் (செப்​.27) என் வாழ்​நாளில், நம் கரூர் சொந்​தங்​களின் வாழ்​வில், நம் தமிழக உறவு​களின் மனதில் ஆறாத ரணமாக, தீராத வலி​யாக அமைந்​து​விட்ட நாள். நாமும், நம் கரூர் சொந்​தங்​களும், தவெக சொந்​தங்​களும் சொல்ல முடி​யாத சோகத்​தைச் சுமந்து நிற்​கிறோம்.

நம் இதயத்​தில் சுமந்த உறவு​களை இழந்து தவிக்​கும் நமக்​கு, ஆறு​தலாக​வும் ஆதர​வாக​வும் அரணாக​வும் நாமே இருப்​போம். நினைவில் வாழும் அனைத்து உறவுகளுக்​கும் நம் இதய அஞ்​சலி. இவ்​வாறு முதல்​வர் தெரி​வித்​துள்​ளார்.

SCROLL FOR NEXT