கனிமொழி எம்.பி | கோப்புப் படம் 
தமிழகம்

திமுக தேர்தல் அறிக்கை எப்போது? - கனிமொழி தகவல்

செய்திப்பிரிவு

தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணிகள் இன்னும் 10 நாட்களில் முடிக்கப்படும் என்று திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்பி தெரிவித்தார்.

இதுகுறித்து கனிமொழி எம்.பி. சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: சட்டப்பேரவைத் தேர்தலுக்கான திமுகவின் தேர்தல் அறிக்கை தயாராகி வருகிறது.

          

இன்னும் 10 நாட்களில், அது முழுமை பெற்று முதல்வரிடம் வழங்கப்படும். காங்கிரசுடன் பேச்சுவார்த்தை சுமுகமாக நடத்தப்பட்டு, விரைவில் தொகுதி பங்கீடுகள் இறுதி செய்யப்படும்.

திராவிட கருத்துக்களை முன்னெடுத்துச் செல்லும் ஒரே தலைவர் ஸ்டாலின் என்ற நம்பிக்கையாலும், திமுக மீது உள்ள நம்பிக்கையாலும், முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம், தன்னை திமுகவில் இணைத்துக் கொண்டுள்ளார். இதன்மூலம், திராவிட இயக்கத்தை உண்மையாக நடத்திக் கொண்டிருப்பவர்கள் யார்? திராவிட மாடல் ஆட்சியை தரக்கூடியவர்கள் யார்? என்று தமிழக மக்களுக்கு தெளிவாகத் தெரிந்துவிட்டது. இவ்வாறு கனிமொழி கூறினார்.

SCROLL FOR NEXT