மதுராந்தகத்தில் திமுக வேட்பாளர் பரந்தாமனை ஆதரித்து மாமண்டூர் பகுதியில் திறந்த வேனில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட கனிமொழி எம்.பி.

 
தமிழகம்

மதுராந்தகம் தொகுதியில் பிரச்சாரத்தின்போது முதல்வர் விஜய்யை ‘ஸ்வீட் ப்ரோ’ என அழைத்த கனிமொழி

செய்திப்பிரிவு

மதுராந்தகம்: மது​ராந்​தகத்​தில் திமுக வேட்​பாளரை ஆதரித்து பிரச்​சா​ரத்​தில் ஈடு​பட்ட கட்​சி​யின் துணைப் பொதுச் செய​லா​ளர் கனி​மொழி எம்​.பி. தமிழக முதல்​வர் விஜய்யை ஸ்வீட் ப்ரோ என அழைத்​ததோடு, தூயசக்தி தற்​போது திருட்டு சக்​தி​யாக மாறி​விட்​ட​தாக விமர்​சித்​தார்.

மது​ராந்​தகம் திமுக வேட்​பாளர் பரந்​தாமனுக்கு ஆதர​வாக நேற்று மாமண்​டூர் பகு​தி​யில் அவர் பேசி​ய​தாவது: மது​ராந்​தகம் சட்​டப்​பேர​வை தொகுதிக்கு இடைத்​தேர்​தல் யாரால் வந்​தது என உங்​களுக்கு தெரி​யும். தூயசக்​தி, தூயசக்தி எனக்​கூறி​விட்​டு, திருட்டு சக்​தி​யாக மாறி​யுள்​ளது. வாக்​களித்த மக்​களை அவமானப்​படுத்​தும் வகை​யில் இடைத்​தேர்​தல் நடை​பெறு வரு​கிறது. தீர்ந்து போன சக்தி எனக்​கூறி​விட்டு அந்த இயக்​கத்தை சேர்ந்​தவரை தங்​கள் கட்​சிக்கு அழைத்து வந்து மீண்​டும் அதே தொகு​தி​யில் வேட்​பாள​ராக நிறுத்தி வாக்கு கேட்​கிறார்​கள்.

முதல்​வர் விஜய், திமுக தலை​வரை மை டியர் ஸ்வீட் அங்​கிள் என்று அழைப்​பது​போல், நானும் விஜய்யை தம்பி என அழைக்​கப் போகிறேன். அதாவது, ப்ரோ, ஸ்வீட் ப்ரோ என அழைக்​கின்​றேன். தேர்​தல் பிரச்​சா​ரத்​துக்கு வந்த ஸ்வீட் ப்ரோ, திமுகவை மட்​டுமே தொடர்ந்து விமர்ச்​சித்து வரு​கிறார்.

மேலும், சனி, ஞாயிறு 2 நாட்​கள் விடு​முறை எடுக்​கும் ஒரே முதல்​வர் விஜய்​தான். சோசி​யல் மீடி​யா​வில் விமர்ச்​சித்​தால் வழக்கு பதிவு, முன்​னாள் அமைச்​சர்​கள் மீது வழக்​குப் பதிவு செய்​கிறார்​கள். பேரறிஞர் அண்​ணா, கலைஞர் வளர்த்த இயக்​கத்தில் இருந்​து, யாரும் எங்​கும் செல்​ல​மாட்​டார்​கள். அதனால், உதயசூரியனுக்கு வாக்​களித்​தால் இங்​கிருந்து யாரும் வெளியே செல்லமாட்​டார்​கள். மக்​கள் நம்பி வாக்​களிக்​கலாம்.

மேலும், குழந்​தைகள் தங்​களின் வீட்​டில் அடம்​பிடித்து வாக்கு கேட்​கு​மாறு பேசி​ய​வர்​தான் இந்த முதல்​வர். மேலும், மது​ராந்​தகம் தொகு​திக்கு பிரச்​சா​ரத்துக்கு முதல்​வர் வரும் வழி​யில், வண்​டலூர் அருகே சிறுமி பாலியல் துன்​புறுத்​தலுக்கு ஆளானார். ஆனால், தேர்​வெழுத அச்​சப்​பட்டு பொய் கூறு​வ​தாக தெரிவிக்​கப்​பட்​டது. இவ்​வாறு பேசி​னார். இதே​போல், பெரும்​பேர் கண்​டிகை, கருங்​குழி, மது​ராந்​தகம், கீழ் அத்​தி​வாக்​கம் கூட்​டுச்​சாலை ஆகிய பகு​தி​களி​லும் அவர் பிரச்​சாரம் செய்​தார்​.

SCROLL FOR NEXT