தமிழகம்

திருச்சி மாநகர காவல் ஆணையர்களில் தொடர்ந்து நீண்ட காலம் பணியாற்றும் காமினி

3 ஆண்டுகள் 9 மாதங்களை கடந்தார்!

எம்.கே.விஜயகோபால்

திருச்சி: திருச்சி மாநகர காவல் ஆணையர்களில் தொடர்ந்து நீண்ட காலம் பணியாற்றுபவர் என்ற பெருமையை தற்போதைய ஆணையர் என்.காமினி பெற்றுள்ளார்.

திருச்சி மாவட்டத்தில் இருந்து பிரித்து மாநகர காவல் ஆணையரகம் உருவாக்க தமிழக அரசு 1997 ஜூன் 1-ம் தேதி அரசாணை பிறப்பித்தது. அதன்படி, முதல் ஆணையராக வடிவேல் ஜூன் 8-ம் தேதி பொறுப்பேற்றார்.

அவரை தொடர்ந்து கே.ராதா கிருஷ்ணன், விபாகர் சர்மா (2 முறை), ஜே.கே.திரிபாதி, அசுதோஷ் சுக்லா, சி.வி.ராவ், எஸ்.ஜி.ராஜேந்திரன், அலெக்ஸாண்டர் மோகன் (2 முறை), சுனில்குமார் சிங் (2 முறை), பிரதீப் வி.பிலிப், சங்கர் ஜிவால், அசோக்குமார் தாஸ், பிரமோத் குமார், கரண் சின்கா, கருணாசாகர்,

வன்னியபெருமாள், மாசானமுத்து, சைலேஷ் குமார் யாதவ், சஞ்சய் மாத்தூர், எம்.என்.மஞ்சுநாதா, அருண் (2முறை), அமல்ராஜ், வரதராஜூ, லோகநாதன், கார்த்திகேயன் ஆகிய ஐபிஎஸ் அதிகாரிகள் திருச்சி மாநகர காவல் ஆணையர்களாக பணியாற்றியுள்ளனர்.

மாநகர முதல் பெண் ஆணையராக எம்.சத்தியபிரியா 32-வது ஆணையராக பொறுப்பேற்றார். அவரைத் தொடர்ந்து 33-வது ஆணையராக என்.காமினி பொறுப்பேற்றார்.

2023-ம் ஆண்டு பொறுப்பேற்ற காமினி, தொடர்ந்து 3 ஆண்டுகள் 9 மாதங்களைக் கடந்து பதவி வகித்து வருகிறார். இதற்கு முன் சைலேஷ்குமார் யாதவ் 3 ஆண்டுகள் 9 நாட்கள் தொடர்ந்து ஆணையராக பணியாற்றியதே அதிகபட்சமாக இருந்தது.

SCROLL FOR NEXT