தமிழகம்

முதல்வர் விஜய்யுடன் கமல்ஹாசன் சந்திப்பு: திரைத்துறையை மேம்படுத்த ஆலோசனை

செய்திப்பிரிவு

சென்னை: ​முதல்​வர் விஜய்​யை, நடிகரும் மக்​கள் நீதி மய்​யம் கட்​சி​யின் தலை​வரு​மான கமல்​ஹாசன் நேற்று சந்​தித்​துப் பேசி​னார்.

சென்னை நீலாங்​கரை​யில் உள்ள முதல்​வர் விஜய்​யின் இல்​லத்​துக்கு நேற்று வந்த கமல்​ஹாசன், தமிழக முதல்​வ​ராக பொறுப்​பேற்​றுள்ள விஜய்க்கு வாழ்த்து தெரி​வித்​தார். சுமார் 30 நிமிடங்​கள் நடை​பெற்ற இந்த சந்​திப்​பின்​போது, திரைத்துறை பாது​காப்பு குறித்து இரு​வரும் விரி​வாக விவா​தித்​த​தாகத் தகவல்​கள் வெளி​யாகி​யுள்​ளன.

இந்​தச் சந்​திப்பு குறித்து கமல்​ஹாசன் தனது ‘எக்​ஸ்' தளப் பதி​வில்,“தமிழக முதல்​வர் தம்பி விஜய்யை நேரில் சந்​தித்து வாழ்த்​துகளைத் தெரி​வித்​தேன். தமிழ்​நாட்டை மேம்​படுத்​தும் பல கனவு​களை உற்​சாகத்​துடன் என்​னிடம் பகிர்ந்​து​கொண்​டார். இந்​தச் சந்​திப்​பின்​போது அவர் காட்​டிய பண்​பும் அன்​பும் நெகிழ்ச்​சி​யளித்​தது.

பல்​வேறு இடையூறுகளைச் சந்​தித்து வரும் தமிழ்த் திரைப்​படத் துறைக்கு தமிழ்​நாடு அரசின் ஆதர​வும் அரவணைப்​பும் தேவை என்​பதை வலி​யுறுத்​தி, 6 முக்​கிய​மான கோரிக்​கைகள் அடங்​கிய மனுவை அவரிடம் அளித்​துள்​ளேன். நன்மை மலரட்​டும்!” எனத் தெரி​வித்​துள்​ளார். முன்​ன​தாக, நேற்று முன்தினம் திமுக தலை​வர் மு.க.ஸ்​டா​லின் மற்​றும் எதிர்க்​கட்​சித் தலை​வர் உதயநிதி ஸ்டா​லின் ஆகியோரை சென்னை சித்​தரஞ்​சன் சாலை​யில் உள்ள அவர்​களது இல்​லத்​தில் கமல்​ஹாசன் நேரில் சந்​தித்​துப் பேசி​னார் என்பது குறிப்​பிடத்​தக்​கது.

SCROLL FOR NEXT