தமிழகம்

இணையவழி கல்வி மாணவர்களை சென்றடைய கிராமப்புற தபால் நிலையங்களில் ஸ்மார்ட் டிவிக்கள்: சென்னை ஐஐடி இயக்குநர் வேண்டுகோள்

செய்திப்பிரிவு

சென்னை: கல்வி நிறுவன வளாகங்​களில் இருக்​கும் தபால் நிலை​யங்​களை அஞ்​சல் துறை புதுப்​பித்து வரு​கிறது. அந்த வகை​யில், சென்னை கிண்டி ஐஐடி வளாகத்​தில் உள்ள துணை தபால் நிலை​யம் அடுத்த தலை​முறை​யினரின் பயன்​பாடு​களுக்கு ஏற்ப, ‘என்​-ஜென்’ (நியூ ஜெனரேஷன்) தபால் நிலை​ய​மாக மாற்​றப்​பட்​டுள்​ளது.

இளம் பயனாளர்​கள் எளி​தில் அணுகும் வகை​யில் ஏ.சி. இலவச வைஃபை, புத்​தகங்​கள், பலகை விளை​யாட்​டு​கள், சார்​ஜிங் போர்ட் என பல்​வேறு வசதி​களு​டன் அமைக்​கப்​பட்​டுள்ள தபால் நிலை​யத்தை ஐஐடி இயக்​குநர் காமகோடி நேற்று திறந்து வைத்​தார்.

பின்​னர் அவர் கூறும்​போது, “இளைஞர்​களைக் கவரும் வகை​யில் ஏ.சி. வசதி​யுடன் நவீன தபால் நிலை​யம் அமைக்​கப்​பட்​டுள்​ளது. பல்​வேறு கல்வி நிறு​வனங்​களி​லும் இது​போல உரு​வாக்​கப்பட வேண்​டும்.

ஐஐடி பேராசிரியர்​களால் நடத்​தப்​படும் ‘கல்வி சக்​தி’ திட்​டத்தை கிராமப்​புற மாணவர்​களுக்​கும் கொண்டு செல்ல திட்​ட​மிட்டு வரு​கிறோம். இதற்​காக, கிராமப்​புற தபால் நிலை​யங்​களில் இணைய வசதி​யுடன் கூடிய ஸ்மார்ட் டிவியை அஞ்​சல் துறை அமைத்து தரவேண்​டும். அதன்​மூலம் ஐஐடி பாடத்​திட்​டங்​கள் கிராமப்​புற மாணவர்​களுக்​கும் சென்​றடை​யும்” என்​றார்.

சென்னை நகர மண்டல அஞ்​சல் துறை தலை​வர் நடராஜன் கூறும்​போது, “தமிழகத்​தில் முதன்​முதலாக கொங்கு பொறி​யியல் கல்​லூரி​யிலும், தற்​போது சென்னை ஐஐடி​யிலும் என்​-ஜென் தபால் நிலை​யம் தொடங்​கப்​பட்​டுள்​ளது.

அடுத்​து, எஸ்​ஆர்​எம் கல்​லூரி​யில் தொடங்​கப்பட உள்​ளது. தபால் நிலை​யங்​கள் மற்​றும் அஞ்​சல் துறை​யின் சேவை​களை நோக்கி இளம் தலை​முறை​யினரை ஈர்க்​கும் வித​மாக இது​போன்ற முயற்​சிகள் மேற்​கொள்​ளப்​படு​கின்​றன” என்​றார். சென்னை நகர மண்டல அஞ்​சல் துறை இயக்​குநர் மனோஜ் மற்​றும் அஞ்​சலக அதி​காரி​கள், ஐஐடி பேராசிரியர்​கள்​ உடன்​ இருந்​தனர்​.

SCROLL FOR NEXT