கோப்புப் படம்

 
தமிழகம்

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்ட விரிவாக்கம்: 17 லட்சம் பெண்களுக்கு முதல்வர் இன்று வழங்குகிறார்

செய்திப்பிரிவு

சென்னை: கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் 2-ம் கட்ட விரிவாக்கத்தில் 17 லட்சம் பெண்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கும்நிகழ்வை முதல்வர் மு.க.ஸ்டா லின் இன்று சென்னையில் தொடங்கி வைக்கிறார்.

கடந்த 2023-ம் ஆண்டு மார்ச் 27-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின், ‘‘கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்கும் திட்டம் ஏறத்தாழ ஒருகோடி குடும்பத் தலைவிகளுக்கு, மாதம் ரூ.1000 வழங்கிடும் வகையில் அமைந்திடும்” என அறிவித்தார்.

சென்னையில் விழா அதன்படி, முதல் கட்டமாக சுமார் 1,13,75,492 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு, ஒவ்வொரு மாதமும் 15-ம் தேதி அவர்கள் வங்கிக்கணக்கில் ரூ.1000 செலுத்தப்பட்டு வருகிறது. இதை யடுத்து, தற்போது இத்திட்டம் இரண்டாம் கட்டமாக விரிவாக்கப்படுகிறது. இதற்கான நிகழ்ச்சி இன்று மாலை 3 மணிக்கு சென்னை நேரு உள்விளையாட் டரங்கில் நடைபெறுகிறது.

இதில், புதிய பயனாளிகளுக்கு உரிமைத் தொகை வழங்கும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் இதில் பங்கேற்கின்றனர்.

சமூக சேவகி பங்கேற்பு: இந்நிகழ்ச்சியில், சமூக சேவகியும், சமூக அநீதிகளுக்கு எதிராக காந்திய வழியில் போராடியவரும் பத்மபூஷன் விருது பெற்றவருமான கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் மற்றும் 2022-ம் ஆண்டு சீனாவின் காங்சோவில் நடைபெற்ற மாற்றுத்திறனாளர் ஆசிய விளையாட்டு பூப்பந்து போட்டியில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தியவருமான துளசிமதி முருகேசன் உள் ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

ஏற்கெனவே, 1,13,75,492 பயனாளிகளுக்கு உரிமைத் தொகை வழங்கப்பட்டுவரும் நிலையில், தற்போது விதிமுறைகளில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. அதாவது முன்பு நான்கு சக்கர வாகன உரிமையாளர் என்ற விதிமுறை தளர்த்தப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் தற்போது 17 லட்சம் பயனாளிகள் சேர்க்கப்பட்டுள்ளனர். மேலும், திட்டம் தொடங்கப்பட்ட கடந்த 2023-24-ம் ஆண்டு முதல் கடந்த நவம்பர் வரை இத்திட்டத்துக்கு மொத்தம் ரூ.35,741.92 கோடி நிதி ஒதுக்கப்பட்டு, பயனாளிகளுக்கு ரூ.30,838.45 கோடி வங்கிக்கணக் கில் சேர்க்கப்பட்டுள்ளது குறிப் பிடத்தக்கது.

SCROLL FOR NEXT