உள்படம்: கேடயம்
சென்னை: சைதாப்பேட்டை சட்டப்பேரவைத் தொகுதியை முன்மாதிரி தொகுதியாக மாற்றும் நோக்கில், சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பல்வேறு சமூகநலத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.
அதன் ஒருபகுதியாக, சைதாப்பேட்டை தொகுதியில் ‘கலைஞர் கணினி கல்வியகம்’ தொடங்கி, தொகுதியில் உள்ள படித்த ஏழை மற்றும் பொருளாதாரத்தில் நலிவுற்ற மாணவர்களுக்காகப் பல்வேறு பயிற்சிகள் இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றன.
இங்கு கடந்த 5 ஆண்டுகளில் 1,165 மாணவ-மாணவிகள் பயிற்சி பெற்றுள்ளனர். இந்நிலையில் தென்னிந்தியாவில் செயல்படும் 450 ‘டேலி’ மையங்களில், கணினி கலைஞர் கல்வியகத்தை முதல் மையமாக ‘டேலி’ நிறுவனம் தேர்வு செய்துள்ளது. அதற்கான கேடயம் மற்றும் சான்றிதழை அமைச்சர் மா.சுப்பிரமணியனிடம் அந்நிறுவனத்தினர் நேற்று வழங்கினர்.