தமிழகம்

போதைப்பொருள் நெட்வொர்க்கை அழிக்காமல் அலட்சியம்: தமிழக காவல்துறைக்கு காடேஸ்வரா சுப்பிரமணியம் கண்டனம்

செய்திப்பிரிவு

சென்னை: தமிழக காவல்​துறை போதைப் பொருள் நெட்​வொர்க்கை கண்​டறிந்து துடைத்​தெறி​யாமல் மேம்​போக்​காக செயல்​படு​கிறது என்று இந்து முன்​னணி மாநிலத் தலை​வர் காடேஸ்​வரா சி.சுப்​பிரமணி​யம் கண்​டனம் தெரி​வித்​துள்​ளார்.

இதுகுறித்து அவர் வெளி​யிட்​டுள்ள அறிக்​கை: ராஜ​பாளை​யம் பழைய பேருந்து நிலை​யத்​தில் தணி​காசலம் என்​பவரை ஒரு கும்​பல் கொன்று விட்டு தப்​பிச் சென்​றுள்​ளது. தணி​காசலம் விநாயகர் சதுர்த்தி நிகழ்ச்​சிகளில் கலந்து கொண்​ட​தால் காவல்​துறை குறிப்​பு​களில் அவர் இந்து முன்​னணி பொறுப்​பாளர் என்​றுள்​ளது.

அதனால் இந்து முன்​னணி பொறுப்​பாளர் கொலை என்று செய்​தி​களில் வந்​துள்​ளது. பல ஆயிரம் மக்​கள் விநாயகர் சதுர்த்தி ​விழா​வில் கலந்து கொள்​கிறார்​கள். அது பொது​நிகழ்வு ஆகும்.

தமிழகத்​தில் கடந்த சில நாட்​களாக போதைப் பொருள் நடமாட்​டம், போதை​யால் ஏற்​படும் சட்​டம் ஒழுங்கு சீர்​குலைவு மற்​றும் கொலைகள் பற்​றிய செய்​தி​களைப் பார்க்​கிறோம்.

இளம் பெண்​கள் கஞ்சா போதை​யில் சாலைகளில் ரகளை செய்​யும் காணொளி தமிழகத்​துக்கு தலைக்​குனிவு. கடந்த ஆட்​சிக்கு எதி​ராக மக்​கள் கரு​தி​யது இந்த போதை குற்​றங்​கள்​தான்.

இந்த ஆட்​சி​யிலும் காவல்​துறை போதைப் பொருள் நெட்​வொர்க்கை கண்​டறிந்து துடைத்​தெறி​யாமல் மேம்​போக்​காக செயல்​படு​வ​தாக குற்​றச்​சாட்டு எழுந்​துள்​ளது.

இது போன்ற சம்​பவங்​களால் முதல்​வர் விஜய் தலை​மையி​லான அரசு மீது மக்​கள் நம்​பிக்​கையை இழக்க நேரிடும். குற்​றங்​கள் நிகழ்​வதற்கு காவல்​துறை வழக்​க​மான ஆயிரம் காரணங்​கள் சொன்​னாலும் குற்​ற​வாளி​களுக்கு சட்​டத்​தின் மீதான பயம் இல்​லாததே முதன்​மைக் காரண​மாகும்.

தணி​காசலம் கொலைக் குற்​ற​வாளி​களைக் கண்​டு​பிடித்து அவர்​களுக்கு கடுமை​யான தண்​டனையை அரசு உறு​தி​செய்ய வேண்​டும்​. இவ்​வாறு அவர்​ தெரி​வித்​துள்​ளார்​.

SCROLL FOR NEXT