டி.கிருஷ்ணகுமார்

 
தமிழகம்

சட்ட ஆணைய தலைவராக நீதிபதி டி.கிருஷ்ணகுமார் நியமனம்

செய்திப்பிரிவு

சென்னை: தமிழ்​நாடு மாநில சட்ட ஆணை​யத்​தின் தலை​வ​ராக நீதிபதி டி.கிருஷ்ணகு​மார் நியமிக்​கப்​பட்​டுள்​ளார்.

இதுதொடர்​பாக தமிழக அரசின் சட்​டத்​துறை செயலர் பி.சுமதி வெளி​யிட்​டுள்ள அரசாணை​யில் கூறப்​பட்டு இருப்​ப​தாவது: தமிழ்​நாடு மாநில சட்ட ஆணை​யத்தை தமிழக அரசு மாற்​றியமைத்​துள்​ளது.

அதன்​படி, சட்ட ஆணை​யத்​தின் தலை​வ​ராக மணிப்​பூர் உயர் நீதி​மன்​றத்​தின் முன்​னாள் தலைமை நீதிபதி டி.கிருஷ்ணகு​மார் நியமிக்​கப்​பட்​டுள்​ளார்.

முன்​னாள் கூடு​தல் தலை​மைச் செயலர் டி.கே.​ராமச்​சந்​திரன், சட்​டத்​துறை முன்​னாள் செயலர் ஏ.அருணகிரி ஆகியோர் ஆணை​யத்​தின் முழுநேர உறுப்​பினர்​களாக​வும், முன்​னாள் மாவட்ட நீதிப​தி​கள் பி.மோகன்​தாஸ், ஆர்​.கோ​விந்​த​ராஜன் ஆகியோர் பகு​திநேர உறுப்​பினர்​களாக​வும் நியமிக்​கப்​பட்​டுள்​ளனர். சட்​டத்​துறை​யில் செயலர் அந்​தஸ்​தில் உள்ள அதி​காரி முழுநேர உறுப்​பினர்​-செயல​ராக செயல்​படு​வார்.

ஆணை​யத்​தின் பணி​கள்

மாநில சட்ட ஆணை​யம், தற்​போது இருக்​கின்ற சட்​டங்​களில் உள்ள குறை​பாடு​களை நிவர்த்தி செய்​வதற்​கான ஆலோ​சனை​களை அரசுக்கு வழங்​கும்.

சமூக பொருளா​தார சட்ட நடவடிக்​கைளை​யும் அரசுக்கு பரிந்​துரை செய்​யும். மேலும் மாநிலங்​களுக்கு இடையி​லான உறவு​களை​யும், மத்​தி​ய-​மாநில அரசுகளுக்கு இடையே​யான உறவு​களை​யும் மேம்​படுத்​து​வதற்​கான வழி​முறை​கள் தொடர்​பாக​வும் ஆலோ​சனை வழங்​கும்.

மாநில அரசு தொடர்​புடைய மத்​திய அரசு சட்​டங்​களில் செய்ய வேண்​டிய மாற்​றங்​கள் அல்​லது திருத்​தங்​கள் தொடர்​பாக​வும் அரசுக்கு ஆலோ​சனை வழங்​கும்.

பதவிக்​காலம்

மாநில சட்ட ஆணை​யத்​தின் தலை​வர், முழுநேர மற்​றும் பகு​திநேர உறுப்​பினர்​கள் ஆகியோரின் பதவிக்​காலம் 3 ஆண்​டு​கள் ஆகும். இந்த ஆணை​யம் சென்னை கிண்டி திரு.​வி.க. தொழிற்​பேட்​டை​யில் உள்ள சிட்கோ கட்​டிடத்​தின் 5-வது தளத்​தில் செயல்​படும். இவ்​வாறு அந்த அரசாணை​யில்​ கூறப்​பட்​டுள்​ளது.

SCROLL FOR NEXT