தமிழகம்

கள் இறக்க, விற்க அனுமதி கோரிய வழக்கில் 6 ஆண்டுகளாக பதிலளிக்காத அரசுக்கு நீதிபதிகள் எச்சரிக்கை

செய்திப்பிரிவு

மதுரை: தமிழகத்​தில் கள் இறக்க​வும், விற்​க​வும் அனுமதி கோரிய வழக்​கில் 6 ஆண்​டுகளாக பதில் மனு தாக்​கல் செய்​யாத நிலை​யில் ஏப். 27-க்குள் பதிலளிக்​கா​விட்​டால் அபராதம் விதிக்​கப்​படும் என உயர் நீதி​மன்​றம் எச்சரிக்கை விடுத்​துள்​ளது.

தூத்​துக்​குடி சிலோன் காலனியைச் சேர்ந்த ஆர்​.ஆறு​முகம், உயர் நீதி​மன்ற கிளை​யில் 2020-ல் தாக்​கல் செய்த மனு: தமிழகத்​தில் மது​விலக்கு சட்​டம் 1937-ல் கள் இறக்​க​வும், விற்​க​வும் தடை விதிக்​கப்​பட்​டுள்​ளது.

          

இந்த தடை​யால் பனை மரம் வளர்ப்​போர் பல்​வேறு பாதிப்​பு​களை சந்​தித்து வரு​கின்​றனர். கள்​ளுக்​கான தடையை விலக்​கக்​கோரி உயர் நீதி​மன்ற கிளை​யில் மனு தாக்​கல் செய்​யப்​பட்​டது.

இந்த வழக்கு விசா​ரணை​யின் போது அரசு தரப்​பில் கள்​ளில் போதைக்​காக பல வேதிப்​பொருட்​கள் கலப்ப​தால் தடை விதிக்​கப்​பட்​டுள்​ளது. கள் உடல் நலனுக்கு கேடு விளைவிக்​கும் எனத் தெரிவிக்​கப்​பட்​டது.

கள் போதைப்​பொருள் அல்ல. உடலுக்கு நல்​லது. வெளி​நாட்டு மது​பானங்​களின் விற்​பனையை பெருக்​கு​வதற்​காகவே கள்​ளுக்கு தடை விதிக்​கப்​பட்​டுள்​ளது.

வெளி​நாட்டு மது​பானங்​களை​விட கள்​ளில் குறை​வாகவே போதை உள்​ளது. எனவே மது​விலக்கு சட்​டத்​தில்கள் இறக்​க​வும், விற்​க​வும் தடை விதிப்​பட்​டிருப்​பதை நீக்​கி அனு​மதி தர உத்​தர​விட வேண்​டும். இவ்​வாறு கூறப்​பட்​டிருந்​தது.

இந்த மனு 2020-ல் விசா​ரணைக்கு வந்​த​போது தமிழக உள்​துறை செயலர், தமிழ்​நாடு மது​விலக்கு மற்​றும் ஆயத்​தீர்வை செயலர் பதிலளிக்க நீதிப​தி​கள் உத்​தர​விட்​டனர். இந்த வழக்கு நீதிப​தி​கள் என்​.சதீஷ்கு​மார், எம்​.ஜோ​தி​ராமன் அமர்​வில் மீண்​டும் விசா​ரணைக்கு வந்​தது.

பின்​னர் நீதிப​தி​கள், 2020-ல் தாக்​கல் செய்​யப்​பட்​ட வழக்கில் இப்​போது வரை தமிழக அரசு பதிலளிக்​க​வில்​லை. அரசு தரப்​பில் பதில் மனு தாக்​கல் செய்ய கால அவகாசம் கோரப்​பட்​டுள்​ளது.

இதனால் ஏப்​ரல் 27-க்​குள் பதில் மனு தாக்​கல் செய்ய வேண்​டும். தவறி​னால் அடுத்த விசா​ரணை​யின்​போது அபராதம் விதிக்​கப்​படும் என உத்​தர​விட்​டனர்.

SCROLL FOR NEXT