சிதம்பரம் நடராஜர் கோயில் | கோப்புப் படம் 
தமிழகம்

நிர்வாக சீர்கேடுகள் களையப்படும் வரை சிதம்பரம் கோயிலை நிர்வகிக்க நீதிபதிகள் தலைமையில் குழு

செய்திப்பிரிவு

சென்னை: சிதம்​பரம் நடராஜர் கோயில் கனகசபையில் நின்று பக்​தர்​கள் தரிசனம் செய்ய அனுமதி​யளித்து அறநிலை​யத் துறை பிறப்​பித்த உத்​தரவை எதிர்த்து பொது தீட்​சிதர்​கள் தரப்​பில் சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் வழக்​கு​கள் தொடரப்​பட்​டன. அந்த அரசாணைக்கு ஆதர​வாகவும் வழக்​கு​கள் தொடரப்​பட்​டிருந்​தன.

நீதிப​தி​கள் ஜி.ஜெயச்​சந்​திரன், இ.மனோகரன் அமர்​வில் இந்த வழக்​கு​கள் மீதான விசா​ரணை நடந்​தது. வழக்கு தொடர்ந்த டி.ஆர்.ரமேஷ் மற்​றும் மனுதா​ரர்​கள் தரப்​பில் வழக்​கறிஞர்​கள் கே.ஹரிசங்​கர், ஜி.சந்​திரசேகரன் ஆகியோ​ரும், அறநிலை​யத் துறை தரப்​பில் சிறப்பு அரசு வழக்​கறிஞர் ஆர்.பரணிதரன், குற்​றவியல் வழக்​கறிஞர் என்.பழனிவேல் ஆகியோ​ரும் ஆஜராகி வாதிட்​டனர்.

அனைத்து தரப்பு வாதங்​களை​யும் கேட்ட நீதிப​தி​கள் பிறப்​பித்​துள்ள உத்​தரவு: சிதம்​பரம் கோயில் நிர்​வாகத்​தில் உள்ள சீர்​கேடுகள் களை​யப்​படும் வரை நிர்​வாகத்தை கவனிக்க, உயர் நீதி​மன்ற முன்​னாள் நீதிபதி வி.பாரதிதாசனை தலை​வ​ராகவும், முன்​னாள் நீதிபதி ஆர்.சுரேஷ்குமாரை இணைத் தலை​வ​ராகவும் கொண்ட புதிய இடைக்​கால நிர்​வாகக் குழுவை அமைக்​கிறோம். இந்த குழு​வில், முன்​னாள் ஐஏஎஸ் அதி​காரி ராஜேந்​திரனை உறுப்​பின​ராகவும், பொது தீட்​சிதர்​கள் சங்​கத்​தின் செய​லா​ளர் மற்​றும் இந்து சமய அறநிலை​யத் துறை செயலர் ஆகியோரை அலு​வல்சாரா உறுப்​பினர்​களாகவும் நியமிக்​கிறோம்.

கனகசபையில் நின்று அனைத்து பக்​தர்​களும் சுவாமி தரிசனம் செய்​ய​வும், தேவாரம், திரு​வாசகம் பாடுவதில் சம வாய்ப்பு வழங்​கப்​படுவதையும் இந்த நிர்​வாகக் குழு உறுதி செய்ய வேண்​டும்.

அதே நேரம், அன்​றாட பூஜைகள், திரு​விழாக்​களை நடத்​து​வது பொது தீட்​சிதர்​களின் பிரத்​யேக உரிமை என்​ப​தால் அதில் நிர்​வாகக் குழு தலை​யிடாது. கோயி​லின் அன்​றாட வரவு செலவு கணக்​கு​களை பொது தீட்​சிதர்​கள் ஒவ்​வொரு மாதமும் 5-ம் தேதி நிர்​வாகக் குழு​விடம் ஒப்​படைக்க வேண்​டும். இவ்​வாறு நீதிப​தி​கள் உத்​தர​விட்​டுள்​ளனர்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT