தமிழகம்

விவாகரத்து வழக்குகளில் மைனர் குழந்தைகளின் உணர்வை மதிக்க வேண்டும்: நீதிபதிகள் அறிவுரை

செய்திப்பிரிவு

சென்னை: ‘​வி​வாகரத்து வழக்​கு​களில் மைனர் குழந்​தைகளின் உணர்​வு​களுக்​கும், விருப்​பங்​களுக்​கும் கட்​டா​யம் மதிப்​பளிக்க வேண்​டும்’ என பெற்​றோருக்​கும், நீதி​மன்​றங்​களுக்​கும் உயர் நீதி​மன்ற நீதிபதிகள் அறி​வுரை வழங்​கி​யுள்​ளனர்.

கருத்து வேறு​பாட்டால் மனை​வியைப் பிரிந்து வாழும் கணவர் ஒரு​வர், விவாகரத்​துக்கோரி சென்னை குடும்ப நல நீதி​மன்​றத்​தில் வழக்கு தொடர்ந்​துள்ளார். அந்த வழக்கு நிலு​வை​யில் இருக்கும் நிலை​யில் தங்​களது 11 வயது இரட்​டையர்​களான ஆண் குழந்தைகளுக்​குச் சொந்​தம் கொண்டாடி பெற்றோர் உயர் நீதி​மன்​றத்​தில் வழக்கு தொடர்ந்தனர்.

அந்த வழக்கை விசாரித்த தனி நீதிப​தி, வார நாட்களில்தாயிட​மும், சனி மற்​றும் ஞாயிற்​றுக்​கிழமை​களில் தந்​தை​யிட​மும் இருக்க உத்​தர​விட்​டார். இந்த உத்​தரவை எதிர்த்து கணவர் தரப்​பில் தாக்​கல் செய்​யப்​பட்ட மேல்​முறை​யீட்டு வழக்கு நீதிப​தி​கள் எஸ்​.எம்​.சுப்​ரமணியம், முகமது ஷபீக் ஆகியோர் குழந்தைகளிடம் தனியாக விசா​ரித்​தனர். அப்போது அவர்கள், தந்தையும் அவரது குடும்பத்​தினரும் தங்​களை உணர்​வுப்பூர்​வ​மாக துன்புறுத்​து​வ​தால்தாயிடமே இருக்க விருப்​பம் தெரி​வித்தனர்.

அதையடுத்து நீதிப​தி​கள், அவர்களை தாயாரின் பராமரிப்​பிலேயே இருக்கவும் கல்​வி,பராமரிப்பு செல​வு​களை தந்தை ஏற்கவும் உத்​தர​விட்​டனர். மேலும் நீதிப​தி​கள், ‘‘விவாகரத்து வழக்​கு​களில் மைனர் குழந்​தைகளின் உணர்​வு​களுக்​கும், விருப்​பங்​களுக்​கும் மதிப்​பளிக்க வேண்​டும்’’ என பெற்​றோருக்​கும் நீதி​மன்​றங்​களுக்​கும்​ அறி​வுறுத்​தி​யுள்​ளனர்​.

SCROLL FOR NEXT