உரிய ஆவணங்கள் இல்லாததால் கோவையில் பறிமுதல் செய்யப்பட்ட தங்க, வைர நகைகள்.

 
தமிழகம்

கோவை, பல்லடத்தில் ஆவணமில்லாத ரூ.13 கோடி மதிப்பு நகைகள் பறிமுதல்

செய்திப்பிரிவு

கோவை/திருப்பூர்: கோவை மற்​றும் பல்​லடத்​தில் உரிய ஆவணங்​கள் இன்றி கொண்டு செல்​லப்​பட்ட ரூ.12.93 கோடி மதிப்​பிலான தங்க, வைர நகைகள், வெள்​ளிப் பொருட்​களை பறக்​கும் படை அதி​காரி​கள் நேற்று பறி​முதல் செய்​தனர்.

கோவை சிங்​காநல்​லூர் தொகு​திக்கு உட்​பட்ட 9-வது பறக்​கும் படை​யினர் அலு​வலர் சாமி​நாதன் தலை​மை​யில் நேற்று கொடிசியா சாலையில் கண்​காணிப்பு பணியில் ஈடு​பட்​டிருந்​தனர். அப்போது, அவி​நாசி சாலை நோக்கி வந்த வேனை நிறுத்தி சோதனையிட்டனர்.

          

வேனில் 6 கிலோ தங்​கம் மற்​றும் வைர நகைகள், 8.47 கிலோ வெள்​ளிப் பொருட்​கள் இருந்​தன. இவற்​றின் மதிப்பு ரூ.10 கோடியே 18 லட்​சத்து 21 ஆயிரம் ஆகும். ஆனால், உரிய ஆவணங்​கள் இல்​லாத​தால், அலு​வலர்​கள் நகைகளை பறி​முதல் செய்தனர்.

தொடர்ந்து தேர்​தல் நடத்​தும் அலு​வலரிடம் தகவல் தெரி​வித்​து​விட்​டு, கோவை தெற்கு வட்​டாட்​சி​யர் அலு​வல​கம் அருகே உள்ள கரு​வூலத்​தில் ஒப்​படைத்​தனர்.

ரூ.2.75 கோடி நகை

இதேபோல், திருப்​பூர் மாவட்​டம் பல்​லடம், செட்​டி​பாளை​யம் சாலை பிரி​வில் தேர்​தல் பறக்​கும்​படை அதி​காரி​கள் நேற்று முன்​தினம் சோதனை​யில் ஈடு​பட்​டிருந்​தனர். அப்​போது கோவை​யில் இருந்து திருப்​பூர் நோக்​கிச் சென்றவேனை நிறுத்தி சோதனை​யிட்​டனர்.

இதில் கூரியர் பில்மட்​டும் வைத்​துக்​கொண்டு தங்​க, வைர நகைகள், வெள்ளி பொருட்​கள் 15 பெட்​டிகளில் கொண்டு சென்​றது தெரிய​வந்​தது. இதன் மதிப்பு ரூ.2.75 கோடி​யாகும்.

திருப்​பூரில் உள்ள நகைக் கடைக்கு டெலிவரி செய்​வதற்​காக நகைகளை கொண்டு செல்​வ​தாக வேன் ஓட்​டுநர் தெரி​வித்​தார். எனினும் உரிய ஆவணம் இல்​லாத​தால் அவற்​றைப் பறி​முதல் செய்து தேர்​தல் நடத்​தும் அலு​வல​ரான சரவணனிடம் ஒப்​படைத்​தனர்​.

SCROLL FOR NEXT