தமிழகம்

எந்தக் கட்சிக்கும் சார்பில்லாமல் செயல்படுவேன்: சட்டப்பேரவை தலைவர் ஜே.சி.டி.பிரபாகர் உறுதி

செய்திப்பிரிவு

சென்னை: எந்​தக் கட்​சிக்​கும் சார்​பில்​லாமல் செயல்​படு​வேன், எதிர்க்​கட்​சிக்​கும் சம வாய்ப்​பு, சம உரிமை வழங்​கப்​படும் என்று சட்​டப்பேரவை தலை​வர் ஜே.சி.டி.பிர​பாகர் உறுதி அளித்​துள்​ளார்.

தமிழக சட்டப்பேரவை தலை​வ​ராக ஜே.சி.டி.பிர​பாகர் நேற்று தேர்வு செய்​யப்​பட்​டார். அவரை உறுப்​பினர்​கள் வாழ்த்​திப் பேசி​னார். அதற்கு நன்றி தெரி​வித்து பேரவைத் தலை​வர் பேசி​ய​தாவது:

எம்​ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் மறைவுக்​குப் பிறகு, ஒரு சரி​யான தலை​மை​யைத் தேடி என் மனம் தவித்​தது. மீண்​டும் ஒரு எம்​ஜிஆர் நமக்கு கிடைக்​க​மாட்​டாரா என்று மனம் ஏங்​கியது.

அந்த ஏக்​கத்தை போக்​கிய தலை​வர்​தான் நம் முதல்​வர் விஜய். முதல்​வ​ராக பதவி​யேற்ற பிறகு எதிர்க்கட்​சித் தலை​வர்​களை எல்​லாம் சந்​தித்​தார். ஒரு புதிய கோணத்​தில் அவர் காட்​டி​யிருக்​கிற அரசி​யல் பண்​பு, எல்​லோராலும் பாராட்​டப்படு​கிறது. முதல்​வர் விஜய்யை என்​னைப் போலவே தமிழக மக்​களும் எம்​ஜிஆ​ராகத்​தான் பார்க்​கிறார்​கள்.

பெரும் வைரக்கல்

சட்​டப்​பேரவை என்​பது மக்​களின் ஏகோபித்த குரல் ஒலிக்​கும் உயரிய ஜனநாயக மன்​ற​மாகும். சமூக நீதி, கல்வி வளர்ச்​சி, மொழி உரிமை, மாநில முன்​னேற்​றம், தமிழகம் உயர்​வடைய வகுக்​கப்​பட்ட பல திட்​டங்​களுக்​கும், நிறைவேற்​றப்​பட்ட சட்​டங்​களுக்​கும் அடி​நாத​மாக விளங்​கியது.

நிறைவேற்​றப்​பட்ட பல தீர்​மானங்​களை வரலாற்​றில் இடம் பெறச் செய்​தது. இந்த மாமன்​றத்தை எவ்​வளவு பெரிய மனிதர்​கள் அலங்​கரித்​துள்ளனர். என் அரசி​யல் வாழ்​வில் பெரும் வைரக் கல்​லாக இந்​தப் பொறுப்பை எனக்கு வழங்​கி​யுள்​ளார் முதல்​வர்.

அவை மாண்பு

இந்த நாற்​காலி​யில் அமர்ந்​த​பின் எந்​தக் கட்​சிக்​கும் சார்​பில்​லாமல் முழு அவை​யின் தலை​வ​ராக செயல்​படு​வேன். ஆளும் தரப்​புக்​கும், எதிர்க்​கட்​சிக்​கும் சம வாய்ப்​பும், உரிமை​யும் வழங்​கப்​படும்.

நாம் அனை​வரும் அவை​யின் மாண்பை பாது​காப்​போம்; தரமான விவாதங்​களை வைப்​போம். தனிப்​பட்ட விமர்​சனங்​களைத் தவிர்ப்​போம்; மக்​கள் நலச் சட்​டங்​களை முன்​னிலைப்​படுத்​து​வோம். இவ்​வாறு அவர் பேசி​னார்.

திருக்​குறள், பைபிள் வசனங்​கள்

பேர​வைத் தலை​வர் பொறுப்​பேற்ற ஜே.சி.டி.பிர​பாகர் தனது ஏற்​புரை​யில், திருக்​குறள், பைபிள் வாசகங்​களை குறிப்​பிட்டு பேசி​னார். ‘சொல்​லுக சொல்​லைப் பிறிதோர்​சொல் அச்​சொல்லை வெல்​லுஞ்​சொல் இன்மை அறிந்​து’ என்ற திருக்​குறளை குறி்பிட்​டு, அவை​யில் பேசப்​படும் ஒவ்​வொரு சொல்​லும் மக்​களுக்கு பயனளிக்​கும் உயரிய சொல்​லாக அமைதல் வேண்​டும்.

அந்த வகை​யில் உறுப்​பினர்​கள் அனை​வரும் செயல்பட வேண்​டும் என்​றார். மேலும், “நான் வளர்​கிற​போதே என் உள்​ளத்​தில் ஏற்​றுக்​கொண்​டது மூன்​று​தான்; ஆராய்ந்து முடி​யாத பெரிய காரி​யங்​களை​யும், எண்ணி முடி​யாத அதிச​யங்​களை​யும் அவர் செய்​கிறார்.

உனக்கு செய்​யத்​தக்க திராணி இருக்​கிற​போது, செய்​யத்​தக்​கவர்​களுக்கு செய்​யாமல் இராதே! நீ உன்​னிடத்​தில் அன்பு கூறு​வது​போல பிறரிடத்​தி​லும் அன்பு கூறு என்​கின்ற அந்த வாசகங்​கள்​தான் என் நெஞ்​சத்​தை​விட்டு அன்​றாடம் நீங்​காது இருக்​கிறது” என்​று பைபிள்​ வாசகங்​களை கோடிட்​டு காட்​டி​னார்​.

SCROLL FOR NEXT