தமிழகம்

பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும்: முதல்வரிடம் ஜாக்டோ ஜியோ கோரிக்கை மனு

செய்திப்பிரிவு

சென்னை: பழைய ஓய்​வூ​தி​யத் திட்​டத்தை அமல்​படுத்த வேண்​டும் உள்பட 10 அம்ச கோரிக்​கைகளை நிறைவேற்​றக்​கோரி, ஜாக்டோ ஜியோ ஒருங்​கிணைப்​பாளர்​கள் சென்னை தலை​மைச் செயல​கத்​தில் முதல்​வர் விஜய்யை சந்​தித்து நேற்று மனு அளித்​தனர்.

அவர்​கள் அளித்த மனு​வில் கூறி​யிருப்​ப​தாவது: தவெக தேர்​தல் வாக்​குறு​தி​யில் தெரி​வித்​துள்​ளபடி அரசு ஊழியர், ஆசிரியர்​கள் மற்​றும் அரசு பணி​யாளர்​களின் கனவான பழைய ஓய்​வூ​திய திட்​டத்தை உடனடி​யாக அமல்​படுத்​து​வீர்​கள் என நம்​பு​கிறோம்.

மக்​கள் நலத் திட்​டங்​களை செயல்​படுத்​து​வதற்கு தங்​களது தலை​மையி​லான அரசுக்கு நாங்​கள் முழு ஒத்​துழைப்பை வழங்​கு​வோம்.

அதே​போல், 2010 ஆக.23-ம் தேதிக்கு முன்​ன​தாக பதவி​யேற்ற ஆசிரியர்​களுக்​கு, டெட் தேர்​வில் இருந்து விலக்​களிப்​பது, இடைநிலை, முதுகலை, உயர்​நிலைப்​பள்​ளி, மேல்​நிலைப்​பள்ளி மற்​றும் உடற்​கல்வி ஆசிரியர்​களுக்கு மத்​திய அரசுக்கு இணை​யான ஊதி​யம் வழங்​கு​வது, ஊதிய முரண்​பாடு​களை களைவது, கல்​லூரி பேராசிரியர்​களுக்​கான நிலு​வை​யில் உள்ள பணிமேம்​பாடு, ஊக்க ஊதிய உயர்வை உடனடி​யாக வழங்​கு​வது ஆகிய கோரிக்​கைகளை​யும் நிறைவேற்ற வேண்​டும்.

மேலும், சிறப்பு கால​முறை ஊதி​யம் பெற்​று​வரும் சத்​துணவு, அங்​கன்​வாடி வரு​வாய் கிராம உதவி​யாளர்​கள், ஊராட்சி செய​லா​ளர்​கள், தொகுப்​பூ​தி​யத்​தில் பணி​யாற்​றும் எம்​ஆர்பி செவிலியர்​கள், சிறப்பு ஆசிரியர்​கள், மருத்​து​வ​மனை பணி​யாளர்​கள் ஆகியோ​ருக்கு வரையறுக்​கப்​பட்ட ஊதி​யம் வழங்​க​வும் முன்​வர​வேண்​டும்.

அதே​போல் ஒருங்​கிணைந்த பள்​ளிக் கல்​வித் துறை​யில் பணி​யாற்​றும் பணி​யாளர்​கள், ஆசிரியர்​கள் மற்​றும் பகு​திநேர ஆசிரியர்​களை பணிநிரந்​தரம் செய்ய வேண்​டும். இதுத​விர, அரசு ஊழியர்​கள், ஆசிரியர்​களுக்கு வழங்க மறுக்​கப்​பட்ட 21 மாத ஊதிய மாற்ற நிலுவை தொகையை உடனடி​யாக வழங்​கு​வதுடன், 2002 முதல் 2010 வரை தொகுப்​பூ​தி​யத்​தில் நியமனம் செய்​யப்​பட்ட ஆசிரியர்​கள், அரசு ஊழியர்​களின் பணிக்​காலத்தை பணிவரன் முறைப்​படுத்தி ஊதி​யம் வழங்​க​வும், சாலை பணி​யாளர்​களின் 41 மாத பணி நீக்க காலத்தை முறைப்​படுத்​த​வும் நடவடிக்கை மேற்​கொள்ள வேண்​டும். இவ்​வாறு அதில் கூறப்​பட்​டுள்​ளது.

SCROLL FOR NEXT