பழைய ஓய்வூதியம் உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக ஜாக்டோ-ஜியோ சார்பில் சென்னை சேப்பாக்கத்தில் நேற்று உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. படம்: எஸ்.சத்தியசீலன்

 
தமிழகம்

தமிழகம் முழுவதும் ஜாக்டோ-ஜியோ போராட்டம்: ஜன.6 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்

செய்திப்பிரிவு

சென்னை: பழைய ஓய்​வூ​தி​யத் திட்​டத்தை அமல்​படுத்​தக் கோரி ஜாக்​டோ- ஜியோ சார்​பில் சென்னை உள்படஅனைத்து மாவட்​டங்​களி​லும் நேற்று உண்​ணா​விரதப் போராட்​டம் நடந்​தது. கோரிக்​கையை நிறைவேற்​றா​விட்​டால் ஜன.6 முதல் கால​வரையற்ற வேலைநிறுத்​தத்​தில் ஈடு​படப்போவ​தாக அறிவிக்​கப்​பட்​டுள்​ளது.

அரசு ஊழியர்​களுக்கு பங்​களிப்பு ஓய்​வூ​தி​யத் திட்​டத்தை ரத்து செய்​து​விட்டு மீண்​டும் பழைய ஓய்​வூ​தி​யத் திட்டத்தை நடை​முறைப்​படுத்து​வது உள்பட பல்​வேறு கோரிக்​கைகளை நிறைவேற்​றக்​கோரி அரசு ஊழியர் - ஆசிரியர் சங்கங்​களின்கூட்​டமைப்​பான ஜாக்டோ - ஜியோ அமைப்பு தொடர்ந்து போராடி வரு​கிறது.

இந்​நிலை​யில் சென்னை, மதுரை, திருச்சி, சேலம், கோயம்புத்தூர், நெல்லை உள்பட அனைத்து மாவட்​டங்​களி​லும் ஜாக்டோ - ஜியோ சார்​பில் உண்​ணா​விரதப் போராட்​டம் நேற்று நடை​பெற்​றது. சென்னை சேப்​பாக்​கம் எழில​கம் வளாகத்​தில் நடை​பெற்ற போராட்​டத்​தில் 200-க்​கும் மேற்​பட்ட அரசு ஊழியர்​கள் - ஆசிரியர்​கள் கலந்​து​கொண்​டனர். ஜாக்​டோ-ஜியோ மாவட்ட ஒருங்​கிணைப்​பாளர்​கள் கே.​சாந்​தகு​மார், அந்​தோணி​சாமி ஆகியோர் தலைமை வகித்​தனர்.

இதுகுறித்து தமிழ்​நாடுஅரசு ஊழியர் சங்க மாநில தலை​வரும், ஜாக்​டோ-ஜியோ மாநில ஒருங்​கிணைப்​பாளர்​களில் ஒரு​வரு​மான மு.​பாஸ்​கரன் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: பழைய ஓய்​வூ​தி​யத் திட்​டம்உள்பட 10 அம்ச கோரிக்​கைகளை வலி​யுறுத்தி ஜாக்​டோ-ஜியோ சார்​பில் தமிழகம் முழு​வதும் உண்​ணா​விரதப் போராட்​டம் நடக்​கிறது. ஓய்​வூ​தி​யம் என்​பது அரசு ஊழியர்​களின் உரிமை மட்​டுமல்ல அவர்​களின் வாழ்​வா​தா​ரம், சமூக மேம்​பாடு, நாட்​டின் பொருளா​தா​ரம் சம்​பந்​தப் பட்​டது. ஆட்​சிக்கு வந்​தால் அரசு ஊழியர்​களுக்கு மீண்​டும் பழைய ஓய்​வூ​தி​யத் திட்​டம் நடை​முறைப்​படுத்​தப்​படும் என திமுக வாக்​குறுதி அளித்​தது. ஆனால், இன்​னும் திமுக அரசு அதை நிறைவேற்​ற​வில்​லை.

எனவே, எங்​கள் போராட் டத்தை தீவிரப்​படுத்​தும் வகை​யில் ஜன.6 முதல் கால​வரையற்ற போராட்​டத்தை நடத்த உள்​ளோம். அந்த போராட்​டத்தை அரசு அடக்​கு​முறை கொண்டு ஒடுக்​கி​னாலும் நாங்​கள் அஞ்​சப்போவ​தில்​லை. எங்களின் கோரிக்​கைகள் நிறைவேறும் வரை தொடர்ந்து போராடு​வோம். இவ்​வாறு அவர் கூறி​னார்.

தமிழகம் முழுவதும் காலை 10 மணிக்கு தொடங்​கிய உண்​ணா​விரதப் போராட்​டம் மாலை 5 மணிக்கு முடிவடைந்​தது. இதில் தமிழ்​நாடு தலை​மைச் செயலக சங்​கத் தலை​வரும், ஜாக்​டோ-ஜியோ மாநில ஒருங்​கிணைப்​பாள​ரு​மான கு.வெங்​கடேசன், உயர்​நிலைக்​குழு உறுப்​பினர்​கள் டேனியல் ஜெயசிங், நம்​பி​ராஜன், ஏழு​மலை, என்​.சுபீன், ரமேஷ், தமிழ்​நாடு முது​நிலை பட்​ட​தாரி ஆசிரியர்​கள் கழக நிர்​வாகி அருணா உள்​ளிட்​டோர்​ பங்​கேற்​றனர்​.

SCROLL FOR NEXT