படம்: எஸ்.சத்தியசீலன்

 
தமிழகம்

அப்பழுக்கற்ற அரசியல் தலைவராக திகழ்ந்தவர் க.ராஜாராம்: சட்டப்பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகர் புகழாரம்

செய்திப்பிரிவு

சென்னை: சென்னை கலை​வாணர் அரங்​கத்​தில் முன்​னாள் தமிழக சட்​டப்​பேர​வைத் தலை​வ​ராக இருந்த ராஜா​ராம் “நூற்​றாண்டு விழா” கொண்​டாடப்​பட்​டது. இதில் சிறப்பு விருந்​தின​ராக சபா​நாயகர் ஜே.சி.டி பிர​பாகர், அமைச்​சர் செங்​கோட்​டையன் கலந்து கொண்​டனர்.

அதே​போல் திரா​விடர் கழக தலை​வர் கி.வீரமணி, தமாகா தலை​வர் ஜி.கே.​வாசன், விஐடி வேந்​தர் விசுவ​நாதன், புதிய நீதிக்​கட்​சித் தலை​வர் ஏ.சி.சண்​முகம், முன்​னாள் அமைச்​சர் ஹெச்​.​வி.ஹண்​டே, முன்​னாள் எம்​.பி.​திரு​நாவுக்​கரசர் உள்​ளிட்ட பலர் கலந்து கொண்​டனர்.

விழா​வில் ராஜா​ராமின் நூற்​றாண்டு சிறப்பு மலரை அமைச்​சர் செங்​கோட்​டையன் வெளி​யிட விஐடி வேந்​தர் விசுவ​நாதன் பெற்​றுக்​கொண்​டார். இந்த நிகழ்ச்​சி​யில் பங்கேற்றவர்கள் பேசியதாவது:

அமைச்​சர் செங்​கோட்​டையன்: சேலத்​தில் பிறந்​து, இந்​திய அளவில் பல்​வேறு தலை​வர்​களு​டன் சிறந்த முறை​யில் பழகி, பண்​பாள​ராக​வும், அனை​வரது பாராட்​டை​யும் பெற்​றவ​ராக​ வாழ்ந்து காட்​டிய​வர் ராஜா​ராம்.

குறிப்​பாக, அவரது வாழ்க்கை வரலாற்​றைப் பார்க்​கும்​போது, உண்​மை​யிலேயே ராசா​ராமின் பண்​பும், மனிதநேய​மும் அனை​வருக்​கும் எடுத்​துக்​காட்​டாக அமைந்​திருக்​கிறது.

பேரவைத் தலைவர் ஜே.சி.டி பிர​பாகர்: “சா​தி, மதம், இனம், மொழியைக் கடந்து அனை​வரிட​மும் அன்​பாக பழகக்​கூடிய​வர். பதவி​களை​விட ராஜா​ராம் விட்​டுச் சென்ற அரசி​யல் பண்​பாடும், மனிதநேய​மும் பாராட்​டத்​தக்​கவை.

அப்​பழுக்​கற்ற அரசி​யல்​வா​தி​யாக இருந்​தவர். அந்​தக் காலத்​தில் ஒரு கருத்தை மக்​களிடம் கொண்டு செல்ல நேரடி​யாக மக்​களைச் சந்​தித்து அவர்​களின் பிரச்​சினை​களைக் கேட்க வேண்​டும்.

அதுபோன்ற அரசி​யலைத் தொடங்கி பொதுநலனுக்​காக உழைத்​தவர் ராஜா​ராம். பெரி​யார், அண்​ணா, ராஜாஜி​யுடன் நட்பு பாராட்​டிய​வர். ராஜா​ராமின் நினைவு ஒரு மிகப்​பெரிய முன் உதா​ரண​மாகும்.

விஐடி வேந்​தர் விசுவ​நாதன்: “கடந்த 40 ஆண்​டு​களாக ராசா​ரா​முக்​கும் எனக்​கும் தொடர்பு உண்​டு. எம்​எல்ஏ, எம்​.பி, அமைச்​சர், சபா​நாயகர் போன்ற பதவி​களை வகித்​தா​லும் ஒரு குறை​கூட சொல்​ல​முடி​யாத அளவுக்கு இருந்​தவர். அனைத்து கட்​சி​யில் இருந்​தும் தலை​வர்​கள் வந்​துள்​ளனர். அதனால் தான்​ ரா​சா​ராம்​ சர்​வகட்​சி தலை​வ​ராக இருக்​கிறார். இவ்​வாறு பேசினர்​.

SCROLL FOR NEXT