பரந்தூர் விமான நிலையத் திட்டம் ரத்தால் பூந்தமல்லி - சுங்குவார்சத்திரம் வரை மட்டுமே மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படும்

பரந்தூர் விமான நிலையத் திட்டம் ரத்தால் பூந்தமல்லி - சுங்குவார்சத்திரம் வரை மட்டுமே மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படும்
Updated on
1 min read

சென்னை: கடந்த ஆட்​சி​யின் போது, பரந்​துாரில் புதிய விமான நிலை​யம் அமைக்​கப்​படும் என அரசு அறி​வித்​தது. இதை தொடர்ந்​து, பூந்​தமல்லி முதல் பரந்​தூர் வரை 53 கி.மீ. துாரம் மெட்ரோ ரயில் திட்​டம் செயல்​படுத்த முடிவு செய்​யப்​பட்​டு, கடந்த 2025-ம் ஆண்டு மாதம் விரி​வான திட்ட அறிக்​கையை தமிழக அரசிடம் மெட்ரோ ரயில் நிறு​வனம் சமர்​பித்​தது.

அதற்​கு, தமிழக அரசு 2025-ம் ஆண்டு ஜூன் மாதம் ஒப்​புதல் அளித்து அரசாணை வெளி​யிட்​டது. அதற்​கான ஆரம்ப கட்ட பணி​கள் தொடங்​கப்​பட்​டது. இதனிடையே, தமிழகத்​தில் ஆட்சி மாற்​றம் ஏற்​பட்டு த.வெ.க. அரசு பொறுப்​பேற்ற நிலை​யில், பரந்​தூர் புதிய விமான நிலைய திட்​டத்தை ரத்து செய்​வ​தாக சட்​டப்​பேர​வை​யில் முதல்​வர் விஜய் அறி​வித்​தார்.

இதனால், பூந்​தமல்லி - பரந்தூர் மெட்ரோ ரயில் திட்​டத்​தின் தூரம் குறைக்​கப்​பட்​டு, பூந்​தமல்​லி​யில் இருந்து சுங்​கு​வார்​சத்​திரம் வரை மட்​டுமே திட்​டம் செயல்​படுத்​தப்​பட​வுள்​ள​தாக தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

இது குறித்​து, சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதி​காரி​கள் கூறிய​தாவது: பூந்​தமல்லி – பரந்​தூர் மெட்ரோ ரயில் திட்​டத்தை பொறுத்​தவரை இரண்டு கட்​டங்​களாக செயல்​படுத்த திட்​ட​மிட்​டோம், முதல் கட்​டம் பூந்​தமல்லி – சுங்​கு​வார்​சத்​திரம் வரை, 28 கி.மீ. துாரம் 8,779 கோடி ரூபா​யிலும், இரண்​டாவது கட்​டம் சுங்​கு​வார்​சத்​திரத்​தில் இருந்து பரந்​தூர் விமான நிலை​யம் 2வது முனை​யம் வரை, 25 கி.மீ. துாரம் 7ஆயிரம் கோடி ரூபா​யிலும் மேற்​கொள்ள திட்​ட​மிடப்​பட்​டது.

தற்​போது பரந்​தூர் விமான நிலை​யம் ரத்து செய்​யப்​பட்​டுள்​ள​தால் பூந்​தமல்லி – சுங்​கு​வார்​சத்​திரம் வரை மட்​டுமே முதல் கட்​டத்​துடன் திட்​டம் நிறைவு செய்​யப்​படும். இத்​திட்​டம் மத்​திய, மாநில அரசின் பங்​களிப்​பில் செயல்​படுத்​தப்​படும்​. இவ்​வாறு அவர்​கள்​ கூறினர்​.

பரந்தூர் விமான நிலையத் திட்டம் ரத்தால் பூந்தமல்லி - சுங்குவார்சத்திரம் வரை மட்டுமே மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படும்
ஓபிசி கிரீமிலேயர் தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிரான மனுவை மத்திய அரசு திரும்பப் பெற மாணிக்கம் தாகூர் கோரிக்கை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in