செல்வப்பெருந்தகை

 
தமிழகம்

செல்வப்பெருந்தகை, ஆதரவாளர்கள் வீடுகளில் சோதனையா? - வருமானவரித் துறை திட்டவட்ட மறுப்பு

செய்திப்பிரிவு

சென்னை: தமிழக காங்​கிரஸ் தலை​வர் செல்​வப்​பெருந்​தகை வீட்​டில் வரு​மானவரித் துறை அதி​காரி​கள் சோதனை நடத்த வந்​துள்​ள​தாக அவர் தெரி​வித்த நிலை​யில் அந்த தகவல் உண்​மை​யில்லை என வரு​மானவரித் துறை​யினர் விளக்​கம் அளித்​துள்​ளனர்.

தமிழகத்​தில் நாளை மறு​நாள் சட்​டப்​பேரவை தேர்​தல் நடை​பெறவுள்ள நிலை​யில் பிரச்​சா​ரத்​துக்​காக மக்​களவை எதிர்க்​கட்​சித் தலை​வர் ராகுல் காந்தி நேற்று தமிழகம் வந்​தார். குளச்​சல், நாங்​குநேரி, ஸ்ரீவை​குண்​டம் உள்​ளிட்ட பகு​தி​களில் வாக்கு சேகரிப்​பில் ஈடு​பட்​டார். இந்​தச் சூழலில், நேற்று காலை முதல் தனது சென்னை கீழ்ப்​பாக்​கம் வீட்​டில் வரு​மானவரித் துறை அதி​காரி​கள் சோதனை நடத்தி வரு​வ​தாக தமிழக காங்​கிரஸ் தலை​வர் செல்​வப்​பெருந்​தகை ஒரு தகவலை வெளி​யிட்​டார்.

இதுகுறித்து அவரது எக்ஸ் பக்​கத்​தில், “ராகுல் காந்தி பிரச்​சா​ரத்​துக்​காக தமிழகம் வந்​துள்ள நிலை​யில், வரு​மான வரித்​துறை அதி​காரி​கள் ‘சோதனை’ என்ற பெயரில் ஸ்ரீபெரும்​புதூர் சட்​டமன்​றத் தொகு​திக்​குள் என்னை சட்​ட​விரோத​மாக முடக்கி வைத்​துள்​ளனர். இதன்​மூலம் எனது அரசி​யல் பணி​களை மேற்​கொள்​வதை​யும், மக்​களைச் சந்​திப்​ப​தை​யும் தடுத்​துள்​ளனர்’ என தெரி​வித்​திருந்​தார்.

இதுகுறித்து வரு​மான வரித்​துறை அதி​காரி​கள் அளித்​திருக்​கும் விளக்​கத்​தில், “தமிழக காங்​கிரஸ் தலை​வ​ரான செல்​வப்​பெருந்​தகை வீட்​டில் நாங்​கள் சோதனை நடத்​த​வில்​லை. சோதனை நடத்​தி​ய​தாக வெளி​யான தகவல் உண்​மைக்​குப்​புறம்​பானது’ என்​றனர்.

இதன்​தொடர்ச்​சி​யாக ஸ்ரீபெரும்​புதூரில் செய்​தி​யாளர்​களிடம் செல்​வப்​பெருந்​தகை கூறிய​தாவது: ஸ்ரீபெரும்​புதூர் பகு​தி​யில் மத்​திய அரசின் வரு​மானவரித் துறை என்று கூறிக்​கொண்டு சீருடை அணி​யாத சில அதி​காரி​கள் அடக்​கு​முறையை ஏவி விட்​டிருக்​கிறார்​கள். மாவட்ட ஊராட்​சிக் குழு தலை​வர் படப்பை மனோகரன் உள்​ளிட்ட எனது ஆதர​வாளர்​கள், உறவினர்​கள் மற்​றும் நண்​பர்​களின் வீடு​களில் சோதனை என்ற பெயரில் முற்​றுகை​யிட்​டுள்​ளனர்.

மாநிலத் தலை​வர் என்ற முறை​யில் பிரச்​சா​ரத்​துக்​காக ராகுல் காந்​தியை வரவேற்​கச் செல்ல முடி​யாத​படி கால​தாமதம் செய்​து​விட்​டு, அவர் சென்​றபிறகு அதி​காரி​கள் கலைந்து செல்​கின்​றனர். பாஜக எங்​களை அடக்​கி, முடக்​கி​விட முடி​யாது. தமிழ் பேசும் அதி​காரி​கள்​ ஒரு​வர்​கூட சோதனை​யில்​ இல்​லை” என்​றார்​.

SCROLL FOR NEXT