தமிழகம்

பிரதமர் நிகழ்ச்சியில் மேடையில் அமர்ந்த விவகாரம்: ‘நாட்டுக்குத் தேவையான பிரச்சினையா?’ - நயினார் நாகேந்திரன் விமர்சனம்

செய்திப்பிரிவு

சென்னை: பிரதமர் நிகழ்ச்​சி​யில் நான் மேடை​யில் அமர்ந்​தது நாட்​டுக்கு தேவை​யான பிரச்​சினை​யா, மின்​வெட்டை சரிசெய்​யாமல் இதுகுறித்து அமைச்​சர் நிர்​மல்​கு​மார் பேசிக் கொண்​டிருக்க வேண்​டாம் என தமிழக பாஜக தலை​வர் நயி​னார் நாகேந்​திரன் விமர்​சித்​துள்​ளார்.

சென்​னை​யில் அவர் தலை​மை​யில் மையக்​குழுக் கூட்​டம் நேற்று நடை​பெற்​றது. இதில் வானதி சீனி​வாசன், தமிழிசை, பொன்​.​ரா​தாகிருஷ்ணன் உள்​ளிட்ட மையக்​குழு நிர்​வாகி​கள் பங்​கேற்​றனர்.

கட்​சி​யின் எதிர்​கால வளர்ச்​சி, எதிர் வரும் இடைத்​தேர்​தல், நாடாளு​மன்ற தேர்​தல் உள்​ளிட்​ட​வற்றை எதிர்​கொள்​ளுவது குறித்து ஆலோ​சிக்​கப்​பட்​டது.

கூட்​டத்​துக்கு பின் நயி​னார் நாகேந்​திரன் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: பிரதமர் நிகழ்ச்​சி​யில் மேடை​யில் நான் அமர்ந்​தது குறித்து நான் கருத்துக் கூற முடி​யாது.

நான் மேடை​யில் அமர்ந்​தது​தான் இப்​போது நாட்​டுக்கு தேவை​யான பிரச்​சினை​யா. மின்​வெட்டை சரிசெய்​யாமல் இதுகுறித்து அமைச்​சர் நிர்​மல்​கு​மார் பேசிக் கொண்​டிருக்க வேண்​டாம்.

பிரதமரும் முதல்​வரும் கைகோத்து மெட்ரோ திட்​டத்தை தொடங்கி வைத்​ததே மத்​திய, மாநில அரசு இணக்​க​மாக இருப்​ப​தற்கு சாட்​சி. தவெக தேர்​தல் அறிக்​கை​யில் கூறிய எதை​யும் செய்​ய​வில்​லை, டாஸ்​மாக் கடை களை மூடு​வதுகுறித்த தெளி​வான விளக்​கங்​கள் இல்​லை.

சட்​டம் ஒழுங்கு சரி​யில்​லை, பாலியல் வன்​கொடுமை அதி​கரித்​துள்​ளது. நான் முதல்​வருக்கு சால்வை அணி​வித்த நிகழ்வை கொச்​சைப்​படுத்த வேண்​டாம்.

செவிலியர் போராட்​டத்தை எதிர்க்​கட்​சி​யாக இருந்​த​போது ஆதரித்த தவெக இப்​போது அவர்​களை அடித்து இழுத்து சென்று கைது செய்​கிறது. தமிழகம் முழு​வதுமே மின்​வெட்​டில் மூழ்கப் போகிறது.

முதல்​வர், அமைச்​சர் அதில் தனி கவனம் செலுத்த வேண்​டும். கரப்​பான்​பூச்​சிகள் தேசத்தை துண்​டாட நினைக்​கின்ற தீய சக்​தி​கள். இவ்​வாறு அவர் கூறி​னார்.

SCROLL FOR NEXT